Airtel Black plan: ஏகப்பட்ட பலன்கள்... ஒற்றை சலுகை... மாஸ் காட்டும் ஏர்டெல்...!

By Kevin Kaarki  |  First Published Apr 9, 2022, 4:40 PM IST

Airtel Black plan: ஏர்டெல் பிளாக் ரூ. 1099 விலை சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் அன்லிமிடெட் ஏர்டெல் ஃபைபர் மற்றும் ஏர்டெல் லேண்ட்லைன் இணைப்புக்கள் வழங்கப்படுகிறது.


ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் ஏர்டெல் பிளாக் சலுகைகளை கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிவித்தது. இதில் ரூ. 998, ரூ. 1, 349, ரூ. 1598 மற்றும் ரூ. 2099 என நான்கு சலுகைகள் இடம்பெற்று இருந்தது. 

கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட போது அனைத்து ஏர்டெல் பிளாக் சலுகைகளும் போஸ்ட்பெயிட் இணைப்புக்களாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சலுகைகளுடன் புது சலுகை ஒன்றை ஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

Tap to resize

Latest Videos

ஏர்டெல் பிளாக் பலன்கள்:

அன்படி ஏர்டெல் பிளாக் ரூ. 1099 விலை சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையில் அன்லிமிடெட் ஏர்டெல் ஃபைபர் மற்றும் ஏர்டெல் லேண்ட்லைன் இணைப்புக்கள் வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 200Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. இத்துடன் டி.டி.ஹெச். இணைப்பு, ரூ. 350 மதிப்புள்ள டி.வி. சேனல்கள் சந்தா உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா, ஒரு வருடத்திற்கான ஏர்டெல் எக்ஸ்டிரீம் செயலிக்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஏர்டெல் பிளாக் சலுகைகள் அனைத்தும் போஸ்ட்பெயிட் சிம் கார்டுகளுடன் வழங்கப்படுகின்றன. புதிய ரூ. 1099 சலுகையில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. மேலும் இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவலில், ஏர்டெல் பிளாக் ரூ. 1099 சலுகை பிரீபெயிட் இணைப்பில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த சலுகை மூலம் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என தெரிகிறது.

இரண்டு ஏர்டெல் பிரீபெயிட் சலுகைகள்:

புதிய ஏர்டெல் பிளாக் சலுகை டி.டி.ஹெச்., லேண்ட்லைன், ஏர்டெல் ஃபைபர் என அனைத்து பலன்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. புது சலுகை பற்றி ஏர்டெல் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ. 296 மற்றும் ரூ. 319 விலைகளில் இரண்டு புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருந்தது. இரு சலுகைகளும் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கின்றன.

இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 30 நாட்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் இலவச சந்தா, மூன்று மாதங்களுக்கு அப்பல்லோ 24x7 சர்கில் சந்தா, ஃபாஸ்டேக்கில் ரூ. 100 கேஷ்பேக், விண்க் மியூசிக் சந்தா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஏர்டெல் ரூ. 296 சலுகையில் மொத்தம் 25GB டேட்டா வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 319 சலுகையில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ. 319  ஏர்டெல் சலுகையில் மொத்தம் 60GB டேட்டா வழங்கப்படுகிறது. 

click me!