பட்ஜெட் விலை.. புது மோட்டோ போன்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா..?

By Kevin Kaarki  |  First Published Apr 9, 2022, 4:07 PM IST

இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது.


மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ G22 பட்ஜெட் போனினை இந்திய சந்யில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதில் 6.5 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக மோட்டோரோலா அறிவித்து இருக்கிறது.

இத்துடன் 4GB ரேம், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000mAh பேட்டரி, 15 வாட் சார்ஜிங், 20 வாட் டர்போ சார்ஜர் வழங்கப்பட்டு உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

மோட்டோ G22 அம்சங்கள்:

- 6.5 இன்ச் HD+ 1600x720 பிக்சல் மேக்ஸ்விஷன் 20:9 டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G37 12nm பிராசஸர்
- IMG PowerVR GE8320 GPU
- 4GB ரேம்
- 64GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யு.எக்ஸ்.
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8
- 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
- 2Mஜ டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45 
- 3.5mm ஆடியோ ஜாக்
- பக்க வாட்டில் கைரேகை சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் 
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

புதிய மோட்டோ G22 ஸ்மார்ட்போன் மிண்ட் கிரீன் மற்றும் காஸ்மிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 தள்ளுபடி பெற முடியும். 

click me!