டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் மற்றும் எஸ்.யு.வி. மாடல்களை வாங்குவோருக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. கார் மாடல்கள் மற்றும் எஸ்.யு.வி.க்களுக்கு டாடா மோட்டார்ஸ் அதிகபட்சமாக ரூ. 60 ஆயிரம் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இவை இம்மாத இறுதி வரை வழங்கப்பட இருக்கின்றன. டாடா அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் புதிய டாடா பன்ச் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் தவிர அனைத்து மாடல்களுக்கும் அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
டாடா டியாகோ:
இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலான டாடா டியாகோ வாங்குவோருக்கு ரூ. 31 ஆயிரத்து 500 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ மாடல் ஹூண்டாய் சாண்ட்ரோ மற்றும் மாருதி சுசுகி வேகன் ஆர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
டாடா டிகோர்:
காம்பேக்ட் செடான் மாடலான டாடா டிகோர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 31 ஆயிரத்து 500 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் டாடா டிகோர் மாடல் மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
டாடா நெக்சான்:
டாடா நெக்சான் மாடல் சப்-4-மீட்டர் பிரிவில் மாருதி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய டாடா நெக்சான் மாடலை வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இது நெக்சான் டார்க் தவிர அனைத்து டீசல் வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.
டாடா சஃபாரி:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 7 சீட்டர் மாடலான சஃபாரி 2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்திய சந்தையில் புதிய டாடா சஃபாரி மாடலை வாங்குவோருக்கு ரூ. 40 ஆயிரம் வரையான பலன்கள் வழங்கப்படுகிறது.
டாடா ஹேரியர்:
5 சீட்டர் எஸ்.யு.வி. மாடலான டாடா ஹேரியர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 60 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. எம்.ஜி. ஹெக்டார், கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.