பீட்சா, பர்கர் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுற ஆளா நீங்கள்? NVIDIA & Yum-ன் AI-யால் மாறும் உலகம்!

பீட்சா கடையிலும், பர்கர் கடையிலும் இனி ரோபோக்கள் பரிமாறினால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே பிரம்மிப்பாக இருக்கிறதா?

Fast food meets AI: Nvidia and Yum! Brands are revolutionizing how you order. Here's how

பீட்சா கடையிலும், பர்கர் கடையிலும் இனி ரோபோக்கள் பரிமாறினால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே பிரம்மிப்பாக இருக்கிறதா? NVIDIA மற்றும் Yum! Brands இணைந்து அதை நிஜமாக்கப் போகின்றன! KFC, Pizza Hut, Taco Bell, Habit Burger & Grill போன்ற பிரபலமான ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை புகுத்தி, உணவு உலகையே புரட்டிப் போடத் தயாராகிவிட்டனர்.

இந்த ஆண்டு மட்டும் 500 உணவகங்களில் AI தொழில்நுட்பத்தை நிறுவ திட்டமிட்டுள்ளனர். வாடிக்கையாளர் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, அதிநவீன AI அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளனர்.

பேசும் ரோபோக்கள், மின்னல் வேக ஆர்டர்கள்:

Pizza Hut மற்றும் Taco Bell உணவகங்களில், இனி க்யூவில் நின்று கஷ்டப்பட வேண்டியதில்லை! AI-இயங்கும் குரல் உதவியாளர்கள் உங்கள் ஆர்டர்களை மின்னல் வேகத்தில் பதிவு செய்வார்கள். சிக்கலான மெனுக்களைக்கூட எளிதாகப் புரிந்து, மனிதர்களைப் போல் இயல்பாக உரையாடும் இந்த ரோபோக்கள், காத்திருப்பு நேரத்தை குறைத்து, உங்கள் பசிக்கு உடனடி நிவாரணம் அளிக்கும்.

கம்ப்யூட்டர் கண்கள், கச்சிதமான சேவை:

உணவகத்தின் ஒவ்வொரு மூலையையும் கம்ப்யூட்டர் விஷன் தொழில்நுட்பம் கண்காணிக்கும். டிரைவ்-த்ரூவில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது, சமையலறையில் என்ன நடக்கிறது என்பதை நொடிக்கு நொடி அலசி ஆராய்ந்து, பணியாளர்களை தேவைக்கேற்ப சரிசெய்யும். இதனால், பீக் நேரங்களில் கூட, சூப்பர் ஸ்பீடில் ஆர்டர் டெலிவரி செய்ய முடியும்.

டேட்டா சொல்லும் மேஜிக்:

உணவகத்தின் செயல்திறனை AI நுணுக்கமாக ஆராய்ந்து, மேலாளர்களுக்கு வழிகாட்டும். எந்த நேரத்தில் என்ன விற்பனை அதிகமாகிறது, எந்தப் பணியாளர் சிறப்பாக செயல்படுகிறார் போன்ற டேட்டாக்களை வைத்து, உணவகத்தை இன்னும் சிறப்பாக நடத்த முடியும்.

Byte by Yum! - AI-யின் சூப்பர் பவர்:

Yum! நிறுவனத்தின் Byte by Yum! என்ற தளத்தில், ஆர்டர், டெலிவரி, சரக்கு மேலாண்மை போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து, AI-யின் உதவியுடன் ஸ்மார்ட்டாக செயல்பட வைக்கின்றனர். இது வாடிக்கையாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஒரு இனிமையான அனுபவத்தை வழங்கும்.

இந்த AI புரட்சி, ஃபாஸ்ட் ஃபுட் துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும். இனி, ரோபோக்கள் பரிமாறும் பீட்சா, AI-யின் உதவியுடன் மின்னல் வேக ஆர்டர், மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய உணவகங்கள் என, உணவு உலகம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டும்.

இதையும் படிங்க: வந்தாச்சு e-Taste: இனி ஆன்லைன் பொருட்களை சுவைத்து பார்த்து வாங்கலாம்!

vuukle one pixel image
click me!