அதிக நேரம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தினால் கடுமையான தலைவலி ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஸ்மார்ட்ஃபோன் என்பது தற்போது நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது. அத்தியாவசிய தேவைகளை நமது ஸ்மார்ட்ஃபோனில் இருந்து செய்யமுடியும் என்றாலும், ஓய்வு நேரங்களில் பெரும்பாலானோர் செல்போனிலேயே மூழ்கி கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. நாள் முழுவது சமூக ஊடகங்களை பயன்படுத்துவது அல்லது வீடியோக்களை பார்ப்பது என செல்போனிலேயே செலவழிக்கிறோம்.
எனினும் ஸ்மார்ட்ஃபோனின் அதிகப்படியான பயன்பாடு நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது. ஸ்மார்ட்ஃபோன் மோசமான மன ஆரோக்கியத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை சமீபத்திய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
undefined
தொடர்ச்சியான ஸ்மார்ட்ஃபோன் உபயோகம், முறையற்ற கவனம் செலுத்துதல் அல்லது தொலைபேசியை மிக அருகில் வைத்திருப்பதால் கண் அழுத்தத்தை ஏற்படுத்தும். இது பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு கூட தலைவலியை ஏற்படுத்தும். மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி, தலைச்சுற்றல், கண் சோர்வு, கழுத்து வலி போன்றவை அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதன் அறிகுறிகளாகும். ஸ்மார்ட்ஃபோனை தொடர்ந்து மணிக்கணக்கில் பயன்படுத்துவது, கண் சோர்வு மற்றும் தசை பதற்றத்திற்கு வழிவகுக்கும், இவை அனைத்தும் தலைவலிக்கு பங்களிக்கின்றன.
அதிகப்படியான நேரம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதால் ஏற்படும் தலைவலியை எவ்வாறு போக்கலாம் என்பது ஃபோர்டிஸ் மருத்துவமனை மருத்துவரும், நரம்பியல் துறை மூத்த ஆலோசகருமான டாக்டர் கிருஷ்ணன் வழங்கிய குறிப்புகளை தற்போது பார்க்கலாம்.
ஓய்வு: சில சமயங்களில், எளிமையான தீர்வுதான் சிறந்தது. உங்களுக்கு தலைவலி இருந்தால், ஸ்மார்ட்போனை வைத்துவிட்டு , சில நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். உங்கள் கண்களை மூடி, ஆழ்ந்து மூச்சு விட வேண்டும். உங்கள் உடலில் உள்ள பதற்றத்தையும் போக்குவதில் கவனம் செலுத்துங்கள்.
நீரேற்றம்: நீரிழப்பு தலைவலியை அதிகரிக்கலாம், எனவே நீங்கள் நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அருகில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்து, ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடற்பயிற்சி: வழக்கமான உடற்பயிற்சி தசை பதற்றத்தை குறைப்பதன் மூலம் தலைவலியைப் போக்க உதவும். பதற்றத்திற்கு ஆளாகக்கூடிய கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் கவனம் செலுத்தி, நாள் முழுவதும் சில லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம்
மருத்துவ உதவி: உங்கள் தலைவலி தொடர்ந்து அல்லது கடுமையாக இருந்தால், தொழில்முறை கவனிப்பைத் தேட வேண்டிய நேரம் இதுவாக இருக்கலாம். ஒரு பிசியோதெரபிஸ்ட் உங்கள் கழுத்து மற்றும் தோள்களில் ஏதேனும் முடிச்சுகள் அல்லது பதற்றத்தை சரிசெய்ய உதவலாம்
கண்களைப் பாதுகாக்கவும்: கண் சோர்வு தலைவலிக்கு ஒரு பொதுவான காரணமாகும். எனவே கண் சிரமம் மற்றும் நீல ஒளி வெளிப்பாடு ஆகியவற்றைக் குறைக்க வடிவமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகளை அணியலாம்.. கூடுதலாக, உங்கள் கண்கள் ஓய்வெடுக்க அடிக்கடி இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள. அதிக நேரம் உங்கள் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்கவும்.
தலைவலியால் அவதிப்படுபவர்கள் மௌனமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பல பயனுள்ள சிகிச்சைகள் உள்ளன. தகுதிவாய்ந்த நரம்பியல் நிபுணரிடம் ஆலோசனை பெறுவது இந்த வலிமிகுந்த நிலையில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான முதல் படியாகும். சரியான அணுகுமுறையால், அதைக் கடக்க முடியும் என்று டாக்டர் கிருஷ்ணன் தெரிவித்தார்.