டுவிட்டரில் ப்ளூ சந்தா பெற்றவர்கள், அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்கும் ஆப்ஷன் ஒன்று வரவுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
ட்விட்டர் ப்ளூ சந்தாவை மார்க்கெட்டிங் செய்வதற்காக எலோன் மஸ்க் வழக்கத்திற்கு மாறான உத்திகளைப் பயன்படுத்துகிறார், அதற்காக அவர் அணுகும் சில அணுகுமுறைகள் நல்ல வித்தியாசமாக காணப்படுகின்றன. ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டண முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
சிலருக்கு ப்ளூ சந்தாவும் வேண்டும் அதே சமயம், ப்ளூ சந்தா வாங்கியது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்றும் விரும்புவதாக தெரிகிறது. அவர்களுக்காகவே ஒரு புது ஆப்ஷன் வருகிறது. அதாவது ப்ளூ சந்தா பெற்றவர்கள் அதை சங்கடமாக உணர்ந்தால், அதை மறைக்கும் வசதியும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த அம்சம் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் விரைவில் வெளியிடப்படலாம்.
undefined
அதன்படி, ப்ளூ டிக் செட்டிங்ஸை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு புதிய ஆப்ஷனை ஆராய்ச்சியாளர் அலெஸாண்ட்ரோ பலுஸி உருவாக்கியுள்ளார். இதில் பல ஆப்ஷன்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, உங்கள் சுயவிவரத்தில் நீல நிறச் சரிபார்ப்பு அடையாளத்தைக் காட்ட வேண்டுமா அல்லது மறைக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்வதாகும்.
இது குறித்து அலெஸாண்ட்ரோ பலுஸி கூறுகையில் "உங்கள் சுயவிவரத்தில் உங்கள் நீல நிற சரிபார்ப்பு அடையாளத்தைக் காண்பிப்பதற்கான அல்லது மறைப்பதற்கான ஆப்ஷனைச் சேர்ப்பதன் மூலம், நீங்கள் கணக்கு சரிபார்ப்பு மற்றும் அதற்கு தொடர்புடைய அனைத்தையும் கட்டுப்படுத்தும் திறனை பெறலாம்" என்று அவர் கூறினார்.
முழுவீச்சில் Jio 5G சேவை விரிவாக்கம்.. சுமார் 1 லட்சம் 5ஜி டவர்கள் நிறுவல்!
இருப்பினும், ட்விட்டர் அதிகாரப்பூர்வமாக அம்சத்தை வெளியிடாததால், இது இன்னும் உருவாக்கப் பணியில் உள்ள அம்சமாக இருப்பதால், எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. மேலும், இது முரண்பாடான அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது. ப்ளூ சந்தாவைப் பற்றி பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனிடையே மொபைல் அடிப்படையிலான சந்தாக்களில் டுவிட்டர் நிறுவனம் வெறும் 11 மில்லியன் டாலர்களை மட்டுமே ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சந்தா திட்டமானது இன்னும் எதிர்பார்த்த அளவில் லாபகரமானதாக வருவதற்கு வாய்ப்புகள் குறைவு.