கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூடியூப், டிரைவ் ஆகிய சேவைகள் இந்தியாவில் திடீரென சிறிது நேரத்திற்கு முடங்கியதால் இணையத்தில் பணிபுரியும் பலருக்கும் சிக்கல் ஏற்பட்டது.
ஜிமெயில், யூடியூப், கூகுள் டிரைவ், கூகுள் அனலிட்டிக்ஸ் போன்ற கூகுள் நிறுவன் சேவைள் இன்று சிறிது நேரத்திற்கு முடங்கின. இதனால் இந்தச் சேவைகளை நம்பி பணிபுரியும் கோடிக்கணக்காடி டிஜிட்டல் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த இணையதளங்கள் முடங்கியது பற்றி இந்தியாவில் பலரும் புகார் தெரிவித்துள்ளது. பலரும் கூகுள் சேவைகள் முடங்கியது பற்றி டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். ஜிமெயில் தளத்தை பயன்படுத்த முடியாமல் 502 Error வந்ததாக சிலர் தெரிவித்தனர். பொதுவாக இந்த பிரச்சினை சர்வர் கோளாறு காரணமாக ஏற்படும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்
ஆனால் இந்த முடக்கம் தற்காலிகமானதாகவே இருந்தது என்றும் சில நிமிடங்களுக்கு உள்ளாகவே சரியாகிவிட்டது என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆனால் ஜிமெயில், யூடியூப், டிரைவ் சேவைகள் முடங்கியது பற்றி 2000 புகார்களுக்கு மேல் வந்துள்ளதாக டவுன் டிடெக்டர் (Down Detector) இணையதளம் கூறுகிறது. இது இணையதள சேவைகள் முடக்கம் பற்றிய தகவல்களை வழங்கும் இணையதளம் ஆகும்.
கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடங்கியாத தகவல் வெளியானது. புதிய டவீட்களை பதிவிட முடியவில்லை என்று பலர் கூறினர். அவர்களில் சிலருக்கு நீங்கள் ட்வீட் செய்வதற்கான தினசரி வரம்பை எட்டிவிட்டீர்கள் என்ற தகவலும் திரையில் தோன்றியுள்ளது.
மற்றொரு முன்னணி இணைய சேவை நிறுவனமான மைக்ரோசாப்ட் வழங்கும் சேவைகளும் முடங்கின. அதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளும் முடங்கியது தொழில்நுட்பத் துறையினரை கவலை அடைய வைத்துள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் செலவைக் குறைக்க ஆள்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் எதிரொலியாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகக் கருதப்படுகிறது.