Microsoft Bing தளத்தில் புதிய வசதி.. இனி ஒரே இடத்தில்..

By Velmurugan s  |  First Published Mar 23, 2023, 10:05 AM IST

மைக்ரோசாப்ட் நிறுவனம் இப்போது புத்தம் புதிய ‘Bing Image Creator’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இமேஜ் ஜெனரேட்டர் கருவியாகும். இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


 

கடந்த சில வாரங்களாக சாட் ஜிபிடி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு உட்புகுத்தப்பட்டு, மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது, கடினமான கேள்விக்கு பதிலளிக்கிறது, பெரும் கடினமான தேர்வுகளையும் எளிதில் தேர்ச்சி பெறுகிறது. இதனால் நாளுக்கு நாள் சாட் ஜிபிடிக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

 

இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனமும் சாட் ஜிபிடி தளத்துடன் கைகோர்த்து, புதிய பிங் தேடு பொறி தளத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. அந்த வகையில், மேலும் ஒரு புதிய அம்சமாக AI Image Generator தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இமேஜ் ஜெனரேட்டராகும். இது தேடுபொறியை "அதிக காட்சிப்படுத்தல்" என்ற இலக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு OpenAI இன் Dall-E என்பதைப் பயன்படுத்துகிறது, இது AI சாட்பாட் ஆகும்.

 

இதன் மூலம் வார்த்தைகளை டைப் செய்து ஒரு படத்தை உருவாக்கிக் கொள்ளலாம். அதாவது, ஒரு படம் வேண்டுமென்றால், எந்த மாதிரியான இமேஜ் வேண்டும் என்று பயனர்கள் டைப் செய்தாலே போதும். ஒரு படம் கிரியேட் ஆகி விடும.  இவ்வாறு இமேஜ் கிரியேஷன் டூலைச் சேர்ப்பது என்பது பிங் தளம் தான் முதல் தேடுபொறியாக உள்ளது. இது பயனர்களை ஒரே இடத்தில் உரை மற்றும் காட்சிகளை உருவாக்க அனுமதிக்கும்.

புதிய கருவியைப் பற்றி மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு வலைப்பதிவில் பதிவிட்டுள்ளது. அதில், “பிங் இமேஜ் கிரியேட்டரானது புதிய AI காட்சிக் கதைகள் மற்றும் புதிய Bing மற்றும் Edge முன்னோட்டத்திற்குக் கொண்டு வருகிறோம். OpenAI நிறுவனத்தில் உள்ள எங்கள் கூட்டாளர்களிடமிருந்து DALL∙E மாடலின் மேம்பட்ட பதிப்பால் இது இயக்கப்படுகிறது. இந்த  Bing Image Creator ஆனது நீங்கள் பார்க்க விரும்பும் படத்தை, உங்கள் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உருவாக்க உதவுகிறது’ இவ்வாறு தெரிவித்துள்ளது.

 

click me!