இந்தியாவில் உள்ள மூன்று டுவிட்டர் அலுவலகங்களில் இரண்டு அலுவலகங்கள் மூடப்படுவதாகவும், ஊழியர்கள் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
கடந்தாண்டு எலான் மஸ்க் டுவிட்டரை கைப்பற்றிய பிறகு, அந்நிறுவனத்தில் பெருமளவு ஊழியர்கள் பணி நீக்கம் நடத்தப்பட்டது. அதன் பிறகு, எலோன் மஸ்க் இப்போது ட்விட்டர் அலுவலகங்களை மெல்ல மெல்ல மூடி வருகிறார். இது குறித்து கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் செயல்படும் மூன்று டுவிட்டர் அலுவலகங்களில் இரண்டு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஏற்கெனவே சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் 90 சதவீத ஊழியர்களை எலான் மஸ்க் கடந்தாண்டு பணிநீக்கம் செய்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லியைத் தவிர, மும்பையில் உள்ள தனது ட்விட்டர் அலுவலகத்தையும் மஸ்க் மூடிவிட்டார். பெங்களூரிலும் ஒரு டுவிட்டர் அலுவலகம் உள்ளது. அங்கு முக்கிய பொறுப்புகளில் உள்ள இன்ஜினியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
டுவிட்டர் நிறுவனத்தில் இவ்வாறு அலுவலகங்கைள மூடுவது என்பது புதிதல்ல. ஏற்கெனவே உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் உள்ள டுவிட்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்து, அலுவலகங்களை மூடிவிட்டார்.
மஸ்க் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததிலிருந்து, ட்விட்டர் செயல்பாடுகளை பராமரிப்பது மற்றும் டுவிட்டர் பதிவுகளை ஒழுங்குபடுத்துவது கடினமாக உள்ளது. நிறுவனத்தை ஸ்திரப்படுத்தவும், லாபகாரமாக மாற்றவும் இந்த ஆண்டின் இறுதி வரை இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று மஸ்க் சமீபத்தில் கூறியுள்ளார்.
இந்தியாவில் புதிதாக Paytm Lite செயலி அறிமுகம்! ரகசிய எண் இல்லாமலே பணப்பரிவரத்தனை செய்யலாம்!!
டுவிட்டர் அலுவலகத்திின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், சான் பிரான்சிஸ்கோ, லண்டன் அலுவலகங்களுக்கும் சிக்கல் வந்துள்ளது. அந்த அலுவலகங்களில் மில்லியன் கணக்கான டாலர் வாடகை பாக்கி உள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு பெரும் சிக்கல்கள் ஏற்பட்டது. பின்பு, நிதி இழப்பை தவிர்க்கும் வகையில், டுவிட்டர் அலுவலகங்களில் இருந்த பொருட்கள், டுவிட்டரின் பறவை லோகோ சிலை, காபி மெஷின்கள் போன்றவை ஏலம் விடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டர் நிறுவனத்தை லாபகரமாக மாற்றுவதற்காக எலான் மஸ்க் தரப்பல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் உட்பட வாரத்தில் எல்லா நாட்களும் எலான் மஸ்க் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.