இப்படி செய்தால் போதும்.. உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம்!

By Asianet Tamil  |  First Published Feb 17, 2023, 1:10 PM IST

முக்கியமான நேரத்தில் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால், அது உங்கள் வேலைகளை பாதித்து எரிச்சலை ஏற்படுத்தலாம். அவ்வாறு இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால், அதை முடுக்கி விட்டு, வேகத்தை அதிகரிப்பது எப்படி என்பதை இங்குக் காணலாம்.


என்னதான் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்குகளை மேம்படுத்தி வந்தாலும், இன்டர்நெட்டின் வேகம் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதற்கு ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள், மெமரி, இருப்பிடம் என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், சில நேரங்களில், குறிப்பாக பணம் அனுப்பும் போது அல்லது அவசரமாக மின்னஞ்சல் அனுப்பும் போது இன்டர்நெட் மெதுவாக இருந்தால் பெரும் இன்னலுக்கு ஆளாகிவிடுவோம். 

சில சமயங்களில், உங்கள் ஸ்மார்ட்போனை ஸ்விட்ச் ரீஸ்டார்ட் செய்வது அல்லது ஏரோபிளேன் மோட் வைத்து எடுப்பதும் பெரிதாக உதவாது. அப்படியானால் என்ன செய்வது?  இதற்கு நீங்கள் முதலில் உங்கள் மொபைல் இன்டர்நெட் வேகத்தை சரிபார்க்க வேண்டும்.  

Tap to resize

Latest Videos

மொபைல் இணைய வேகத்தை பார்ப்பது எப்படி?

உங்கள் மொபைல் இணைய வேகத்தை சரிபார்க்க பல செயலிகள், வலைத்தளங்கள் உள்ளன. Ookla Speedtest என்பது அவற்றுள்ள ஒரு பொதுவான இணையதளம் ஆகும்.  Ookla Speedtest அல்லது Speedtest.net தளத்தைப் பயன்படுத்தி உங்கள் மொபைல் இணைய வேகத்தைச் சரிபார்க்கவும். 
இப்போது உங்கள் இணைய வேகம் குறைவாக இருந்தால், இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்க DNS சேஞ்சர் செயலியைப் பயன்படுத்தவும். கூகுள் பிளே ஸ்டோரில் பலவிதமான DNS  சேஞ்சர் செயலிகள் உள்ளன. 1.1.1.1:Faster & Safer Internet, Google DNS Changer போன்ற பல செயலிகள் உள்ளன. இவற்றுள் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பயன்பாட்டை இன்ஸ்டால் செய்யவும். பிறகு, இந்த படிநிலைகளைப் பின்பற்றவும்-

புதிய Twitter CEO அதிகாரியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்! நெட்டிசன்கள் அதிர்ச்சி!

  • - உங்கள் மொபைலில் DNS Changer செயலியை இன்ஸ்டால் செய்து திறக்கவும்
  • - பயன்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை வழங்கி, உங்கள் நெட்வொர்க் அமைப்புகளை அணுகவும்.
  • - நீங்கள் பயன்படுத்த விரும்பும் DNS சேவையகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • - ஆப்ஸ் வழங்கிய இயல்புநிலை DNS சேவையகத்தை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது நீங்கள் பயன்படுத்த விரும்பும் DNS சேவையகத்தின் IP முகவரியை என்டர் செய்யலாம்.
  • - நீங்கள் வெவ்வேறு DNS சர்வரின் வேகத்தைத் தேர்ந்தெடுத்து சரிபார்த்து, வேகமான சர்வரை தேர்வுசெய்யலாம்.
  • - பின்னர், "ஸ்டார்ட்" பொத்தானை கிளிக் செய்து, புதிய DNS சேவையகத்தை செயல்படுத்தவும்.
  • - புதிய DNS சேவையகம் உங்கள் மொபைல் இணைய வேகத்தை மேம்படுத்தியுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.
  • குறிப்பிடத்தக்க வகையில், உங்கள் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிசெய்ய, நம்பகமான மற்றும் பாதுகாப்பான DNS சேவையகத்தைத் தேர்வுசெய்யவும்.
click me!