200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் எலான் மஸ்க்?

By Narendran S  |  First Published Dec 31, 2022, 10:44 PM IST

ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க் 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். வரலாற்றில் மிகப்பெரிய தொகையை இழந்த முதல் நபர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.


ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க் 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். வரலாற்றில் மிகப்பெரிய தொகையை இழந்த முதல் நபர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. ஜெஃப் பெசோஸுக்குப் பிறகு $200 பில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்துக்களைக் கொண்ட இரண்டாவது நபர் மஸ்க் ஆவார். சுவாரஸ்யமாக, ஜனவரி 2021 இல் மஸ்க் கோடீஸ்வரர்களின் முதலிடத்திற்கு உயர்ந்தார். பின்னர் டெஸ்லாவின் பங்குகளில் ஏற்பட்ட சரிவு ஏற்பட்டது. இது தொடர்பாக ப்ளூம்பெர்க் தளத்தில் வெளியான தகவலின்படி, நவம்பர் 2021 போது மஸ்க்கின் பங்குகள் 340 பில்லியனாக உயர்ந்தது. இருப்பினும், அதன்பிறகு, அவர் எந்த லாபத்தையும் காணவில்லை. ஜெஃப் பெசோஸுக்குப் பிறகு, 200 பில்லியன் டாலர்களை வாங்கிய இரண்டாவது நபர் மஸ்க் ஆனார். ப்ளூம்பெர்க் தளத்தின் பில்லியனர்கள் பட்டியலில் மஸ்க் முதலிடத்தில் இருந்தார், ஆனால் அதன் பிறகு LVMH CEO பெர்னார்ட் அர்னால்ட் முந்தியுள்ளார்.

இதையும் படிங்க: இனி பல சேட்களை ஒரே கிளிக்கில் செலக்ட் செய்யலாம்!

Tap to resize

Latest Videos

மஸ்கின் நிகர மதிப்பு முன்பு $338 பில்லியனாக ஆக இருந்த நிலையில், இப்போது $132billion ஆக குறைந்துள்ளது. மஸ்க் ட்விட்டரை $44 பில்லியன் ஒப்பந்தத்தில் வாங்கிய பிறகு டெஸ்லாவின் பங்குகள் சரிந்தன. டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டரின் எதிர்காலம் ஆபத்தில்  கத்தி முனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பராக் அகர்வால், சிஎஃப்ஓ நியூ செகல் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே உள்ளிட்டோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். பின்னர், சுமார் 50 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்தார். தற்போது டெஸ்லா மற்றும் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து மஸ்க் விலகத் தயாராகவும் உள்ளார்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட பப்ஜி கேம் (BGMI) மீண்டும் வருகிறதா?

அவர் டெஸ்லாவுக்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரியை தேடி கண்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் ட்விட்டரைப் பொறுத்தவரையில் இன்னும் சிஇஓ பதவிக்கு உகந்தவரை தேடிகொண்டே இருக்கிறார். முன்னதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என்பதை அறிய மஸ்க் ட்விட்டரில் கருத்துக்கணிப்பை நடத்தினார். எதிர்பார்த்தது போலவே, பெரும்பாலானோர் எலான் மஸ்க் ராஜினாமா செய்ய வேண்டும் என்றே வாக்களித்தனர். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், சிஇஓ பொறுப்பை ஏற்கும் அளவுக்கு முட்டாள்தனமாக இருந்தால் மட்டுமே பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார். இப்படியான சூழலில் தான் வரலாற்றில் மிகப்பெரிய தொகையை இழந்த முதல் நபர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.

click me!