WhatsApp Update: இனி பல சேட்களை ஒரே கிளிக்கில் செலக்ட் செய்யலாம்!

By Dinesh TG  |  First Published Dec 31, 2022, 8:58 AM IST

வாட்ஸ்அப் டெஸ்க்டாப்பில் பல சேட்களை ஒரே கிளிக்கில் செலக்ட் செய்யும் வசதியை விரைவில் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


வாட்ஸ்அப் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் புதிய அம்சங்கள், பாதுகாப்பு அப்டேட்டுகளை வெளியிடுகிறது. இந்த 2022 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் அவதார், கம்யூனிட்டி, ஸ்டேட்டஸ் மேம்பாடு என பல புதிய அம்சங்களைக் கொண்டு வந்தது. இப்போது 2023ஆம் ஆண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், வாட்ஸ்அப் செயலியில் பயனர் அனுபவத்தையும் தனியுரிமையையும் மேம்படுத்தும் இன்னும் கூடுதல் அம்சங்களைக் கொண்டு வரப்பட உள்ளது. 

அந்த வகையில், வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பதிப்பில் பல சேட்களை ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கும் வசதி இப்போது சோதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக WABetaInfo தளத்தில் சில விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் தங்கள் சேட் லிஸ்ட்டை தேர்ந்தெடுத்து, தேவையில்லாத சேட்களை ஒரே கிளிக்கில் டெலிட் செய்யவும், மியூட் செய்யவும், நிர்வகிக்கவும் முடியும்.

Tap to resize

Latest Videos

அதாவது, இனி சேட் மெனுவில் 'சேட்களை தேர்ந்தெடு' என்ற ஆப்ஷன் வரும். அதன் மூலம் பல சேட்களை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுத்தப் பிறகு, அந்த குறிப்பிட்ட சேட்களை மியூட் செய்யலாம், அன்ரீட் செய்யலாம், டெலிட் செய்யலாம். இந்த அம்சம் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை புகாரளித்தல்:

இதற்கிடையில், வாட்ஸ்அப் செயலியானது புதிய அம்சத்திலும் செயல்படுகிறது, இது வாட்ஸ்அப் தளத்தை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, தேவையில்லாத, ஆபாசமான, வெறுக்கத்தக்க ஸ்டேட்டஸ் யாராவது வைத்திருந்தால், அந்த ஸ்டேட்டஸை புகாரளிக்கலாம். மேலும், வாட்ஸ்அப்பின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறக்கூடிய சந்தேகத்திற்கிடமான ஸ்டேட்டஸையும் பயனர்கள் புகாரளிக்கலாம். பீட்டா சோதனை முடிந்த பிறகு இந்த அம்சம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Jio 5G சேவை பல நகரங்களில் விரிவாக்கம்! ஆனால் இப்போது 5ஜிக்கு மாறுவது அவசியமா?

வாட்ஸ்அப் புதிய அப்டேட்: undo delete for me

​​வாட்ஸ்அப் செயலியில் ஏற்கனவே கடந்த வாரம் undo delete for me என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. iOS, ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் பயனர்கள் தாங்கள் தற்செயலாக Delete For Everyone க்கு பதிலாக, Delete For me கொடுத்துவிட்டால், குறிப்பிட்ட மெசேஜ் நமக்கு மட்டும் டெலிட் ஆகும், மறுமுனையில் இருப்பவருக்கு டெலிட் ஆகாது. இதை சரிசெய்யும் வகையில், இப்போது Delete For Me கொடுத்தால், சில நொடிகளுக்கு Undo என்ற ஆப்ஷன் வரும். இதை கிளிக் செய்தால், மீண்டும் முறையாக டெலிட் செய்யலாம்.

click me!