Flipkart ஆஃபர் இன்றோடு முடிவடைகிறது! மிஸ் பண்ணக்கூடாத முக்கிய சலுகைகள்!!

By Dinesh TGFirst Published Dec 31, 2022, 7:53 AM IST
Highlights

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ஆண்டு இறுதி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை நாளை டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், நீங்கள் தவறவிடக் கூடாத முக்கிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை இங்குக் காணலாம்.

Flipkart இயர் எண்ட் சேல் விரைவில் நாளையோடு முடிகிறது. குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். பிக்சல் 6ஏ, ஐபோன் 13, நத்திங் ஃபோன் (1) மற்றும் பிற 5ஜி போன்களுக்கு நல்ல தள்ளுபடியை வழங்குகிறது. அதிசயமாக இந்த முறை இந்த போன்களுக்கு நல்லதொரு ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சில வங்கி சலுகைகளும் உள்ளன. 

Flipkart இன் இயர் எண்ட் விற்பனையின் போது iPhone 13 5G மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.61,999 ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை ஆஃப்லைன் ஸ்டோர்களில் ரூ 69,990 என்று விற்பனை செய்கிறது. எனவே,பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 வாங்கும்போது, நீங்கள் ரூ.7,991 தள்ளுபடி பெறலாம்.

ஃப்ளிப்கார்ட் வழக்கமாக போனின் விலையை விற்பனை செய்த சில நாட்களுக்குள் அதிகரித்துவிடும்.எனவே, நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க திட்டமிட்டால், இது ஒரு நல்ல வாய்ப்பாகும். இதன் பிறகு ஐபோன் 13 விலை அதிகரித்துவிடும்.

ஐபோன் 13 பொறுத்தவரையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, இருப்பினும் ஆனால் செயல்திறன் அடிப்படையில் இது இன்னும் ஒரு திறமையான ஸ்மார்ட்போனாகவே உள்ளது. இதிலுள்ள மென்பொருளைப் பற்றி மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆறு வருட பழைய ஐபோன்களுக்கு கூட தற்போது அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மென்பொருள் தரத்தில் குறைவு இல்லை. 

இருப்பினும், சாதனத்தின் கேமரா அவ்வளவு சிறப்பாக இல்லை. ஐபோன் 13 உடன் ஒப்பிடுகையில் Samsung Galaxy S22+ சிறந்த கேமரா தரத்தை கொண்டுள்ளது. Galaxy S22+ வேகமான செயல்திறன் மற்றும் சிறந்த கேமரா அனுபவத்தை வழங்குகிறது. நல்ல விஷயம் என்னவென்றால், இந்த ஃபிளாக்ஷிப் போன் தற்போது மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. அதாவது Samsung Galaxy S22+ தற்போது ரூ.69,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. மேலும், ஃபெடரல் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் உள்ளது.

விரைவில் Pixel 6a உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் 5G.. விலையும் கம்மி!

இதே போல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.43,999க்கு அறிமுகமான Pixel 6a ஸ்மார்ட்போன், தற்போது நல்ல ஆஃபரில் வந்துள்ளது. ரூ.29,999 ஆகக் குறைந்துள்ளது. இதே விலையில் உள்ள சில பிரபலமான ஃபோன்களை விட இது மிகச் சிறந்த கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் மற்ற சாதனங்களை விட சிறந்த மென்பொருள் அனுபவத்தையும் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு அம்சங்களையும் பெறும். ஒட்டுமொத்த செயல்திறன் நன்றாகவே உள்ளது.

Pixel 6a என்பது கூகுளின் சிறந்த பட்ஜெட் ஃபோன்களில் ஒன்றாகும், மேலும் இந்த ஸ்மார்ட்போன் யூடியூபர் MKBHD நடத்திய பிளைண்ட் கேமரா சோதனையில் 2022 ஆண்டின் சிறந்த கேமரா ஸ்மாரட்போன் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதாவது iPhone 14 Pro மற்றும் Samsung Galaxy S22 Ultra போன்ற போன்களை  விட "சிறந்த இமேஜ்" மற்றும் "சிறந்த செயல்திறன்" என்ற பெயரை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!