இந்தியாவில் தடை பப்ஜி கேமின் மறுவடிவம் BGMI தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் வர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவில் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு பப்ஜி BGMI கேம் தடை செய்யப்பட்டு, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆபத்து காரணமாக BGMI மீது இந்த தடை விதிக்கப்பட்டது. அப்போதிருந்து, இந்தியாவில் கேமிங் பிரியர்கள் பப்ஜி மீதான தடை எப்போது நீக்கப்படும் என்று காத்திருக்கின்றனர். கேமர்கள் முதல் ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் வரை, அனைவரும் BGMI திரும்பப் பெறுவது குறித்து எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Battlegrounds Mobile India (BGMI) மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக AFKGaming BGMI தளத்தில் சில விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அடுத்த மாதம் ஆண்ட்ராய்டு பதிப்பில் பப்ஜி BGMI வரலாம் என்று கூறப்படுகிறது. அண்மயைில் பிரதிக் "ஆல்ஃபா கிளாஷர்" என்ற கேமிங் நேரலையில் 'பிரெட்டோர்சசுகே' என்ற கேமர், தான் கூகுளில் பணிபுரிவதாகக் கூறி, BGMI திரும்பவும் இந்தியாவில் வரும் என்று உத்தேச தேதியைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், BGMI ஜனவரி 15 ஆம் தேதி கூகுள் ப்ளே ஸ்டோரில் மீண்டும் வரும், இது ஒரு உத்தேச தேதி மட்டுமே” என்று கூறினார்.
undefined
விரைவில் Pixel 6a உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் 5G.. விலையும் கம்மி!
பின்னர் மற்றொரு லைவ்ஸ்ட்ரீமில் சோஹைல் "ஹெக்டர்" ஷேக் என்ற கேமர் BGMI திரும்புவதற்கான வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்தார், அவரும், ஜனவரி மாதத்தில் பப்ஜி BGMI திரும்ப வரப்போவதாகவும், கூகுளில் இருந்து ஒருவர் இதைச் சொன்னதாகவும் பகிர்ந்துள்ளார்.BGMI திரும்ப வருவது குறித்து Krafton அல்லது Google நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ஜூலை மாதம் BGMI தடை செய்யப்பட்டதிலிருந்து, க்ராஃப்டன் நிறுவனம் அந்த கேமை மீண்டும் கொண்டு வர அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக கேமர்களுக்கு தொடர்ந்து உறுதி அளித்து வந்தது.. இருப்பினும், ஆப் ஸ்டோர்களில் பிஜிஎம்ஐ கேமம் திரும்பப் வருவது குறித்த எந்த அப்டேட்டோ அறிவிப்போ இதுவரை வெளியிடப்படவில்லை.