Russia Ukraine Crisis: ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் - ரஷ்யா, உக்ரைனில் VPN பயன்பாடு ராக்கெட் வேகத்தில் உயர்வு

By Kevin Kaarki  |  First Published Mar 1, 2022, 2:19 PM IST

Russia Ukraine Crisis: போர் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து ரஷ்யா மற்றும் உக்ரைனில் VPN பயன்பாடு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. 


ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு வலைதளங்களை குறிவைத்து சைபர் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. மேலும் வெளிநாட்டு சமூக வலைதளங்களை இயக்க மாஸ்கோ தடை விதித்துள்ளது. இந்த நிலையில், இருநாட்டை சேர்ந்த பொது மக்கள் இணைய தடைகளை முறியடிக்க ஆன்லைன் டூல்களை பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர்.

இதன் காரணமாக இரு நாடுகளிலும் VPN சேவைக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது. VPN சேவைகள் பயனர் எங்கிருந்து வலைதளங்களை பயன்ப்படுத்துகின்றனர் என்ற விவரங்களை மறைத்துவிடும். ரஷ்யாவில் VPN சேவை பயன்பாடு இதுவரை இல்லாத அளவு 354 சதவீதம் அதிகரித்து இருப்பதாக தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. 

Latest Videos

undefined

சிறப்பு ஆபரேஷன் பெயரில் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிமரிக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தரை, கடல் மற்றும் வான்வழி என மும்முனை தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வருகிறது. இதனிடையே சமூக வலைதளங்கள் மூலம் தகவல் வெளியாவதை தடுக்கும் நோக்கில் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சேவைகளில் கடும் கட்டுப்பாடுகளை ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  மேற்கொண்டது.

வார இறுதி நாட்களில் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து VPN பயன்பாடு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு சில VPN சேவைகளை ரஷ்யா தடை செய்த நிலையில், சில VPN சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.  

திங்கள் கிழமை அன்று, ரஷ்யாவை சேர்ந்த பல்வேறு வலைதளங்கள் ஹேக் செய்யப்பட்டு அவற்றில் போருக்கு எதிரான வாசகங்கள், விளாடிமிர் புதின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிறுத்த கோரும் தகவல்கள் இடம்பெற்றன. 

click me!