உலக அளவில் டெல் நிறுவனம் சுமார் 6,650 பேரை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலக அளவில் டெல் நிறுவனம் சுமார் 6,650 பேரை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது அந்நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க பெரும் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுத்துள்ளனர். அந்த வகையில் கூகுல் நிறுவனம் சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இதேபோல், டிவிட்டர், மெட்டா, பேஸ்புக், அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டனர்.
இதையும் படிங்க: 94 கடன் வழங்கும் செயலிகள் உட்பட 232 செயலிகள் முடக்கம்!
இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது டெல் நிறுவனம் சுமார் 6,650 பேரை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல் நிறுவனத்தின் கணினிகள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக டெல் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், டெல் நிறுவனம் நிச்சயமற்ற எதிர்காலத்துடன் தொடர்ந்து சிதைந்து கொண்டிருக்கும் சந்தை நிலைமைகளை அனுபவித்து வருகிறது.
இதையும் படிங்க: Poco X5 Pro இன்று அறிமுகம்.. எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்!
நாங்கள் இதற்கு முன்னர் பொருளாதார வீழ்ச்சிகளை எதிர்கொண்டுள்ளோம், அதிலிருந்து வலுவாக வெளிப்பட்டும் உள்ளோம். சந்தை மீண்டும் எழும்பும்போது நாங்கள் தயாராக இருப்போம் என்று தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் டெல் நிறுவனத்தின் 5 சதவிகிதம் ஊழியர்கள் என கூறப்படுகிறது. ஏற்கனவே இதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டும் டெல் நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.