ஸ்மைல் பிளீஸ்! விக்ரம் லேண்டரை முதல் முறையாக படம் பிடித்த பிரக்யான் ரோவர்!

By SG Balan  |  First Published Aug 30, 2023, 4:16 PM IST

நிலவில் தன்னை பத்திரமாகத் தரையிறக்கிய  விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் எடுத்த முதல் படத்தை இஸ்ரோ சமூக வலைத்தளத்தில் வெளியட்டுள்ளது.


சந்திரயான்-3 விண்கரத்தின் பிரக்யான் ரோவர் இன்று விக்ரம் லேண்டரை முதல் முறையாகப் படம்ம்பிடித்து அனுப்பியுள்ளது. ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமராவைப் பயன்படுத்தி இந்த போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. நிலவில் இறங்கிய பிறகு ரோவர் எடுத்த முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து போட்டோக்களும் வீடியோக்களும் விக்ரம் லேண்டர் எடுத்தவை தான் என்று இஸ்ரோ கூறியுள்ளது. ரோவர் எடுத்த முதல் புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. பிரக்யான் ரோவர் போட்டோ எடுப்பதற்கு முன் விக்ரம் லேண்டரை நோக்கி, "ஸ்மைல் பிளீஸ்" என்று சொல்வதைப் போலவும் இஸ்ரோ தன் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Latest Videos

undefined

சந்திரயான்-3 திட்டத்தின் சிறந்த படம் இதுதான் எனவும் இஸ்ரோ ட்வீட்டில் குறிப்பட்டிருக்கிறது.

நான் ரெடி தான்... சூரியனை ஆய்வு செய்ய தயாராக இருக்கும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம்!

Chandrayaan-3 Mission:

Smile, please📸!

Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.

The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).

NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE

— ISRO (@isro)

ரோவரில் உள்ள NavCams எனப்படும் நேவிகேஷன் கேமரா மூலம் இந்தப் படம் கிளிக் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா பெங்களூரில் உள்ள எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (LEOS) ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது எனவும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

செவ்வாய்கிழமை வெளியான சந்திரயான்-3 அப்டேட்டில், பிரக்யான் ரோவரில் உள்ள லேசர் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி தென் துருவத்திற்கு அருகிலுள்ள நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியது என்றும் இஸ்ரோ கூறியது. "Al, Ca, Fe, Cr, Ti, Mn, Si மற்றும் O ஆகியவையும் எதிர்பார்த்தபடி கண்டறியப்பட்டுள்ளன. ஹைட்ரஜனை (H) தேடும் பணி நடைபெற்று வருகிறது" என்று இஸ்ரோ தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

வாரத்துக்கு மூணு நாளாவது ஆபீசுக்கு வாங்க... அமேசான் சி.இ.ஓ. எச்சரிக்கையால் ஊழியர்கள் ஷாக்!

"வரைபடத்தில் காண்பிக்கப்பட்டுள்ள முதற்கட்ட ஆய்வுகள் மூலம் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகியவை நிலவின் மேற்பரப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகியவை இருப்பதும் தெரிகிறது. ஹைட்ரஜன் இருப்பது குறித்து முழுமையான விசாரணை நடந்துவருகிறது" என்று இஸ்ரோ அறிக்கை கூறுகிறது.

முன்னதாக, சந்திரயான்-3 இன் விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோட் மூலம் அளவிடப்பட்ட நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாட்டின் வரைபடத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரில் உள்ள பேலோட் நிலவின் மேற்பரப்புக்கு 10 செமீ ஆழம் வரை மட்டுமே ஆராயும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நிலவின் மேற்பரப்பில் மென்மையான தரையிறக்கம், பிரக்யான் ரோவரின் இயக்கம் மற்றும் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் மூலம் அறிவியல் தரவுகளைப் பெறுதல் ஆகியவை சந்திரயான்-3 நிலவுப் பயணத்தின் மூன்று முக்கிய நோக்கங்கள் ஆகும். இதில், இரண்டு நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. மூன்றாவது நோக்கம் நோக்கமான அறிவியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன.

விமானத்தில் 18+ ஏரியா அறிமுகம்! உல்லாசமாகப் பயணிக்க என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?

click me!