ஆப்டிமஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்  செய்தது பிளாக்பெர்ரி.......!!!

 |  First Published Feb 7, 2017, 1:44 PM IST



கனடா பிளாக்பெர்ரி:

ஸ்மார்ட் போன் தயாரிப்பில்,  மிகவும் பிரபலமான கனடாவை  சேர்ந்த பிளாக்பெர்ரி நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.அதன்படி,டெல்லியைச் சேர்ந்த ஆப்டிமஸ் நிறுவனத்துடன்  கனடாவை  சேர்ந்த பிளாக்பெர்ரி நிறுவனம்ன் ஒப்பந்தம்  செய்துள்ளது.  

Tap to resize

Latest Videos

உரிமம் :

ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டிராய்டு தளத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை  தயாரிக்க , ஆப்டிமஸ் நிறுவனம் லைசென்ஸை பெறும் என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்வாறு தயாரிக்கும்  ஸ்மார்ட் போன்களை இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் விற்பனை செய்வதற்கான உரிமத்தையும் ஆப்டிமஸ்  பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ளாக்பெர்ரி நிறுவனம் என்ன சொல்கிறது ? 

தயாரிப்பில்  சிறந்த அனுபவம், விற்பனைக்கு மிகச் சிறந்த டீலர் நெட்வொர்க், ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், ஆப்டிமஸ் நிறுவனத்துடன்,இந்த  ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது பிளேக்பெர்ரி . மேலும், தங்களது பங்குதாரராக ஏற்றுக் கொண்டதாக பிளாக் பெர்ரி நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மூத்த துணைத் தலைவர் அலெக்ஸ் துர்பெர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், இந்தியாவில் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்  போன்  நல்ல  விற்பனையை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது

click me!