
ராயல் என்ஃபீல்டு :
முதன்முறையாக, இரு சக்கர வாகன கஸ்டமைஸில்( உருமாற்றம் ) இறங்கியுள்ள, புனேவை சேர்ந்த பிரபல டிசி நிறுவனம், இரு சக்கர வாகனமான ராயல் என்ஃபீல்டை அட்டகாசமாக உருமாற்றம் செய்துள்ளது.
டிசி2 கார்பன் ஷாட்:
டிசி2 கார்பன் ஷாட் என்ற பெயரில் இந்த கஸ்டமைஸ் மோட்டார்சைக்கிள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை செய்வதற்கு கூடுதலாக ரூ.76,000 செல்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் ?
கஷ்டமைஸ் செய்யப்பட்ட பைக்கில், குதிரை சாவரியில் பயன்படுத்தப்படும் இருக்கை போல் ஒற்றை இருக்கை பொருத்தப்படும்
பெட்ரோல் டேங்க் நீளும் விதத்தில் வடிவமைக்கப்படும்.
ஹெட்லைட்டில், ஹாலஜன் பல்புகளுக்கு பதிலாக எல்இடி பல்புகள் பொருத்தப்படும்
எப்பொழுது புக்கிங் ?
ஜனவரி 25, 2017 முதல் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ரூ.25,000 செலுத்தி புக் செய்து கொள்ள முடியும். இவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட இந்த வாகனத்தை, வருகிற ஜூன் மாதம் முதல் தான் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி புக் செய்வது ?
டில்லி , மும்பை, புனே போன்ற பகுதிகளில் உள்ள டிசி தரகர்கள் மூலமாக பதிவு செய்துக்கொள்ளலாம். அல்லது நாம் வசிக்கும் நகரங்களில் உள்ள டிசி தரகர்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.