nothing phone (1) launch: புது போன் வாங்க ரூ. 1.5 லட்சம் வரை கொடுக்கும் வாடிக்கையாளர்கள்..!

By Kevin Kaarki  |  First Published Jun 23, 2022, 12:35 PM IST

நத்திங் போன் 1 ஏல மாடல்கள் அனைத்திலும் 1 முதல் 100 வரையிலான பிரத்யேக சீரியல் எண்கள் அச்சிடப்பட்டு இருக்கும். 


நத்திங் போன் 1 மாடல் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், வெளியீட்டுக்கு முன்பே இந்த ஸ்மார்ட்போன் ஆன்லைன் ஏலத்தில் கிடைக்கிறது. மிக குறைந்த யூனிட்கள் மட்டும் ஸ்டாக்-எக்ஸ் (Stockx) வலைதளத்தில் ஏலம் விடப்படுகிறது. இதுவரை நத்திங் போன் 1 மாடலை வாங்க அதிகபட்சமாக 2 ஆயிரத்து 679 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் வரை கொடுக்க தயாராக உள்ளனர். 

முதல் 100 போன்கள் ஸ்டாக் எக்ஸ் மூலம் ஏலம் விடப்படுகிறது. ஏலம் ஜூன் 21 ஆம் தேதி துவங்கிய நிலையில், ஜூன் 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் விற்பனையாகும் அனைத்து யூனிட்களிலும் 1 முதல் 100 வரையிலான எண்கள் லேசர் என்கிரேவ் செய்யப்படுகிறது. ஏலம் இன்று (ஜூன் 23) நிறைவு பெறும் நிலையில், 100 போன்களும் 35 நாட்களுக்குள் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Latest Videos

undefined

ஏல நடைமுறை:

நத்திங் போன் 1 ஏல மாடல்கள் அனைத்திலும் 1 முதல் 100 வரையிலான பிரத்யேக சீரியல் எண்கள் அச்சிடப்பட்டு இருக்கும். இந்த போனிற்கான ஏல தொகை தற்போது 2 ஆயிரத்து 679 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் என்ற நிலையில் உள்ளது. ஏலத்தில் போனை வாங்குவோருக்கு 35 நாட்களில் அவர்களுக்கான யூனிட் வினியோகம் செய்யப்பட்டு விடும். ஏலத்தில் வெற்றி பெறுவோர் விவரங்கள் நத்திங் போன் 1 அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற இருக்கிறது.

நத்திங் போன் 1 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

- 6.55 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர்
- 8GB ரேம்
- 128GB மெமரி
- 50MP பிரைமரி கேமரா
- 8MP அலட்ரா வைடு அல்லது டெப்த் கேமரா
- 32MP செல்பி கேமரா
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த நத்திங் ஓ.எஸ்.
- 4500mAh பேட்டரி
- 45 வாட் சார்ஜிங்

நத்திங் போன் 1 விலை விவரங்கள்:

இந்திய சந்தையில் புதிய நத்திங் போன் 1 மாடல் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ. 30 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். 

click me!