மாஸ் காட்டும் பிஎஸ்என்எல்.. ரொம்ப கம்மி விலையில் இரண்டு சூப்பர் ரீசார்ஜ் பிளான்கள் அறிமுகம்.!

By vinoth kumar  |  First Published Jul 1, 2022, 1:29 PM IST

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களை 30 நாள்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்துள்ளது. 


பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு சூப்பர் ரீசார்ஜ் திட்டங்களை 30 நாள்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.228 மற்றும் ரூ.239 இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் இன்று முதல் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த இரண்டு திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள் குறித்த விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ரூ. 49 விலையில் புது சலுகை.... அதிரடி அறிவிப்பு வெளியிட்ட வி நிறுவனம்..!

பிஎஸ்என்எல் ரூ.228 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணையவேகம் 80kbps ஆக குறையும். BSNL-இன் இந்த ரீசார்ஜ் திட்டமானது, Progressive Web பயன்பாட்டில் சேலஞ்ச் அரீனா (Challenge Arena) மொபைல் கேமிங் சேவைக்கான சந்தாவையும் வழங்குகிறது.

இதையும் படிங்க;- அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 வெர்சிஸ் 650 இந்தியாவில் அறிமுகம்... விலை இவ்வளவு தானா?

ரூ.239 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.10 டாக்டைமை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம். கூடுதலாக, இதில் 2 ஜிபி டேட்டாவும் சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 80kbps ஆக குறையும். கேமிங்கின் பலன்களை இந்த திட்டத்திலும் நிறுவனம் சேர்த்துள்ளது.

click me!