
பிரபல பிஎஸ்என்ஏல் நிறுவனமானது, தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இ - மெயில் உருவாக்கும் ஆப்பை அரிமு௮கம் செய்துள்ளது
'டேட்டா மெயில்' என்ற ஆப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் உருவாக்கி உள்ளது . இந்த ஆப்ஸ் பயன்படுத்தி, தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என, ஒன்பது மொழிகளில், 'இ - மெயில்' முகவரியை உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மெயிலை உருவாக்க, மொபைல் எண் மட்டும் போதும் மற்றும் ஆங்கிலம் தெரியாதவர்கள் இந்த ஆப்ஸ் பயன்படுத்தி, அவர்கள் தாய் மொழியிலேயே மெயில் ஐ டியை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த புதிய ஆப்ஸ் தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால் இதன் முக்கியத்துவம் அறிந்தால் மக்கள் அதிகம் இதனை பயன்படுத்த தொடங்குவர். இந்த ஆப்ஸ் இல் குறிப்பாக ரேடியோ என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது. இதன் மூலம் ரேடியோ சேனல்' துவக்க முடியும்
இந்த ரேடியோ சேனலை சமூக வலைத்தளங்களிலும் ஒளிப்பரப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது .
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.