ஜியோ இலவச சேவையை தொடங்கியவுடன், பல தொலைதொடர்பு நிறுவனங்கள் போட்டியை சமாளிப்பதற்காக ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு இலவச சேவையை வழங்கவும் மலிவு கட்டணத்தில் சிறந்த ஆபரையும் வழங்கி வந்தது .
இந்நிலையில் , ஜியோ வின் இலவச சேவை முடிந்து , கட்டண சேவை வழங்க உள்ளதால், இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சலுகைகளை வாரி வழங்குகிறது .
அதன்படி, பிரபல ஏர்செல் நிறுவனமானது 'ஏர்செல் குட்நைட்ஸ்' என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்கீழ் அனைத்து ஏர்செல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் இலவச டேட்டா வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
எப்பொழுது பயன்படுத்த வேண்டும் ?
undefined
ஏர்செல் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ,இந்த ப்ரீ டேட்டா சர்வீசை அதிகாலை 3.00 மணி முதல் காலை 5.00 மணி வரை பயன்படுத்தி கொள்ளலாம் .
மேலும், இந்த சேவையால் ஏர்செல் 2ஜி / 3ஜி வாடிக்கையாளர்கள் ஆப்லைன் வீடியோ, திரைப்படம், மியூசிக் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.
கால அவகாசம்
முதல் இரண்டு மாதங்களுக்கு மட்டும் தினமும 500 எம்பி வரையிலான டேட்டா வழங்க உள்ளதாகவும், தொடர்ந்து பயன்படுத்திட மேலும் பல சலுகை விரைவில் அறிவிக்கப் படும் எனவும் ஏர்செல் தெரிவித்துள்ளது .