போல்ட் ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நெக்பேண்ட் இயர்போன் மாடலை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.
போல்ட் ஆடியோ நிறுவனம் ப்ரோபேஸ் கர்வ் X பெயரில் புதிய நெக்பேண்ட் இயர்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இயர்போனை பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் பத்து மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது.
இதில் ஹை-கிளாஸ் டிரைவர்கள், தரமான பில்டு, IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. முழு சார்ஜ் செய்தால் இந்த இயர்போன் 15 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. இதன் பிரத்யேக வடிவமைப்பு காரணமாக இயர்போன் அணிந்த நிலையில் உடற்பயிற்சி செய்தாலும் இவை காதுகளில் இருந்து கீழே விழாது.
மேலும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளிப், ஃபிளெக்சிபில் நெக்பேண்ட் வழங்கப்பட்டு இருப்பதால், இவை மிகவும் கச்சிதமாக பொருந்து கொள்கின்றன. இது ஒவ்வொருத்தரின் கழுத்து அளவுக்கு ஏற்ப சவுகரியமாக வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது. போல்ட் ஆடியோ ப்ரோபேஸ் கர்வ் X மாடலில் ப்ளூடூத் 5 தொழில்நுட்பம், இன்-லைன் கண்ட்ரோல்கள் உள்ளன.
போல்ட் ஆடியோ ப்ரோபேஸ் கர்வ் X நெக்பேண்ட் இயர்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்போன் அறிமுக சலுகையாக ரூ. 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் ஒரு வருடத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகறது.