Tecno Pop 5S : டூயல் கேமரா, 3020mAh பேட்டரியுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 07, 2022, 11:53 AM IST
Tecno Pop 5S : டூயல் கேமரா, 3020mAh பேட்டரியுடன் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

சுருக்கம்

பட்ஜெட் விலையில் அசத்தல் அம்ங்களுடன் டெக்னோ பாப் 5S ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.   

டெக்னோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடலாக புதிய பாப் 5S மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர பாப் 5X, பாப் 5 மற்றும் பாப் 5 ப்ரோ என மூன்று ஸ்மார்ட்போன்களை டெக்னோ நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டெக்னோ பாப் 5S மாடலில் குவாட் கோர் யுனிசாக் பிராசஸர், டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. 

முற்கட்டமாக மெக்சிகோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டெக்னோ பாப் 5S விரைவில் இந்தியா உள்பட மேலும் சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

டெக்னோ பாப் 5S அம்சங்கள்

- 5.7 இன்ச் 720x1520 பிக்சல் HD+ டிஸ்ப்ளே
- குவாட் கோர் பிராசஸர்
- 2GB ரேம்
- 32GB மெமரி
- 5MP பிரைமரி கேமரா
- QVGA கேமரா
- 2MP செல்ஃபி கேமரா
- 4ஜி எல்.டி.இ., வை-பை, ப்ளூடூத் 4.2
- 3020mAh பேட்டரி
- மைக்ரோ யு.எஸ்.பி. 
- ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்

டெக்னோ பாப் 5S ஸ்மார்ட்போன் டீப் புளூ மற்றும் லைட் பர்பில் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?
நாளை முதல் வேட்டை ஆரம்பம்! சாம்சங் S24 முதல் ஐபோன் வரை... பிளிப்கார்ட் அறிவித்த மெகா ஆஃபர்கள்!