10 நிமிட சார்ஜில் நாள் முழுக்க பேக்கப் - சூப்பர் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்த போட்

By Kevin Kaarki  |  First Published Feb 25, 2022, 1:05 PM IST

போட் நிறுவனம் இந்திய  சந்தையில் புதிய வாட்ச் பிளேஸ் மாடல விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம்  செய்து இருக்கிறது. போட் வாட்ச் பிளேஸ் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் 1.75 இன்ச் டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2.5D curved டிசைன், பல்வேறு பில்ட் இன் வாட்ச் ஃபேஸ்கள், போட் ஹப் ஆப், நூற்றுக்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. போட் பிளேஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடல் மிக மெல்லிய 10mm பாடி கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் உறுதியான மற்றும் எடை குறைந்த பிரமீயம் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிநவீன அப்போலோ 3 புளூ பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மிக குறைந்த அளவு பேட்டரியை பயன்படுத்தும். இதனால் வழக்கத்தை விட அதிக நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும். இத்துடன் 3ATM டஸ்ட், வாட்டர் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இத்துடன் போட் ASAP சார்ஜ் வசதி உள்ளது. இதை கொண்டு ஸ்மார்ட்வாட்ச் மாடலை பத்து நிமிடங்களுக்கு சார்ஜ் செய்து நாள் முழுக்க பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் ஆக்டிவ் செடண்டரி மற்றும் ஹைட்ரேஷன் ரிமைண்டர்கள், SpO2 மாணிட்டர், இதய துடிப்பு சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

14 ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கும் போட் வாட்ச் பிளேஸ் ஆக்டிவ் பிளாக், டீப் புளூ, ரேஜிங் ரெட் மற்றும் செர்ரி பிளாசம் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3499 ஆகும். இந்த வாட்ச் அமேசான் தளத்தில் ஏற்கனவே விற்பனைக்கு கிடைக்கிறது. 

click me!