ரூ. 1499-க்கு இவ்வளவு அம்சங்களா? அசத்தல் இயர்பட்ஸ் அறிமுகம் செய்த போட்

By Kevin Kaarki  |  First Published Jan 28, 2022, 5:12 PM IST

போட் நிறுவனம் இந்திய சந்தையில் ஏர்டோப்ஸ் 111 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது.


போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிதாக ஏர்டோப்ஸ் 111 பெயரில் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக ஏர்டோப்ஸ் 181, ஏர்டோப்ஸ் 601 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை போட் இம்மாத துவக்கத்தில் போட் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது அறிமுகமாகி இருக்கும் ஏர்டோப்ஸ் 111 எண்ட்ரி லெவல் மாடல் ஆகும். 

புதிய ஏர்டோப்ஸ் 111 மாடலில் 13mm ஆடியோ டிரைவர்கள் உள்ளன. இவற்றில் போட் நிறுவனத்தின் பாரம்பரிய டியூனிங், பேஸ் அம்சத்தில் கூடுதல் எஃபெக்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.1 வசதி கொண்டிருக்கிறது. இதில் உள்ள IWP தொழில்நுட்பம் இயர்பட்ஸ் கேசை திறந்ததும் உங்களின் சாதனத்துடன் இணைந்து கொள்கிறது. 

Latest Videos

undefined

இத்துடன் ஏர்டோப்ஸ் 111-ஐ சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஏழு மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. மேலும் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் பிளேபேக் நேரத்தை 28 மணி நேரமாக நீட்டித்துக் கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் ASAP குயிக் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 445 நிமிடங்களுக்கான பிளேபேக் கிடைக்கிறது.

மியூசிக் கண்ட்ரோல், அழைப்புகளுக்கு பதில் அளிப்பது மற்றும் ஸ்மார்ட்போன்களில் உள்ள சிரி மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவைகளை இயக்க குயிக் ரெஸ்பான்ஸ் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. ஏர்டோப்ஸ் 111 மாடலில் இன்பில்ட் மைக்ரோபோன் உள்ளது. இது அழைப்புகளின் போது தெளிவான ஆடியோ அவுட்புட் கிடைக்க வழி செய்கிறது. 

புதிய போட் ஏர்டோப்ஸ் 111 மாடலின் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இதன் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 1,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஏர்டோப்ஸ் 111- ஓசன் புளூ, சேண்ட் பியல், கார்பன் பிளாக் மற்றும் ஸ்னோ வைட் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது.

click me!