Realme 9 Pro : அடுத்த மாதம் இந்தியா வரும் ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

By Kevin Kaarki  |  First Published Jan 28, 2022, 3:52 PM IST

ரியல்மி நிறுவனத்தின்  9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு அடுத்த மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ரியல்மி ஈடுபட்டு வருகிறது. புது ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு நடைபெறும் என அறிவித்துள்ள போதும், ஸ்மார்ட்போன்கள் பற்றி ரியல்மி இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. 

எனினும், ரியல்மி 9 சீரிஸ் மாடல்கள் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ரியல்மி 9  சீரிசில் முதற்கட்டமாக இரண்டு மாடல்கள் மட்டும் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இவை ரியல்மி 9 ப்ரோ மற்றும் ரியல்மி 9 ப்ரோ பிளஸ் ஆகும். இதுகுறித்து சந்தை வல்லுனர்கள் வெளியிட்டுள்ள தகவல்களில் ரியல்மி மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்தியாவில் பிப்ரவரி 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ஐரோப்பிய சந்தையில் இந்த சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டதும், மறுநாளே இவை இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும். முந்தைய தகவல்களின் படி ஐரோப்பிய சந்தையில் ரியல்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்தன. அதன்படி பிப்ரவரி 16 ஆம் தேதி இவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் ரியல்மி இந்தியா அறிவிக்கும் என தெரிகிறது.

இந்தியாவில் ரியல்மி 9 ப்ரோ சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 15 ஆயிரத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதுவரை வெளியான தகவல்களின் படி ரியல்மி 9 ப்ரோ மாடலில் 6.6 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 128GB மெமரி, புகைப்படங்களை எடுக்க- 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ கேமரா என மூன்று லென்ஸ்களும், முன்புறம் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. ரியல்மி 9 ப்ரோ பிளஸ் மாடலில் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் 920 5ஜி பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

click me!