புகழ்பெற்ற கார் நிறுவனமான பி.எம்.டபுள்யூ இந்த ஆண்டு தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது.
பி.எம்.டபுள்யூ மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு சூப்பர் சார்ஜிடு ஆர்5, கான்சப்ட் 90 போன்ற பெயர்களில் பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இதற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் மின்சாரத்தால் இயங்கும் ஸ்கூட்டரை வெளியிடுகிறது.
இத்தாலியில் பழங்கால கார்களுக்கான கண்காட்சி நடைபெற்றது. அப்போது பி.எம்.டபுள்யூ நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது.
இந்த ஸ்கூட்டரில் சிராமிக் எல்.இ.சி விளக்கு முகப்பில் அமைக்கப்படுகிறது. ஆங்கில ''சி'' எழுத்து வடிவத்திலான விளக்குகள் பின்புறத்தில் அமைக்கப்படுகிறது. இதன் இருக்கைகளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து மாற்றக்கூடிய சிறப்பம்சம், தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் , டிஸ்பிளேவில் வண்டியின் வேகம், போகும் பாதை மற்றும் ஹேண்டில் பார்களை பயன்படுத்தும் முறை ஆகியவை உடனே திறையில் தோன்றும் போன்ற சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.
மேலும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை குறித்த விவரங்களை விரைவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் வெளியிடும் என கூறப்படுகிறது.
வரும் காலங்களில் ஏற்படும் எரிபொருள் பற்றாக்குறையை குறைக்க பி.எம்.டபுள்யூ நிறுவனம் மின்சாரத்தால் இயங்கும் இந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியுள்ளது.