கடந்த சில நாட்களுக்கு முன் “பேஸ்புக் நிறுவனம்” நாம் நினைப்பதை அதாவது மூளை மூலம் கணினியின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்திற்கு காப்பி ரைட்ஸ் வாங்கியது.
இந்த நிலையில் முகநூல் நிறுவனத்திற்கு அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் தற்போது மூளை மூலம் மொபைலில் இருக்கும் அப்ளிகேஷன்களை கட்டுப்படுத்தும் தொழில்நுடபத்திற்கு காப்பி ரைட்ஸ் வாங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அப்ளிகேஷன்களை கட்டுப்படுத்த இந்த காப்பி ரைட்ஸ் வாங்கப்பட்டுள்ளதாம். இது மொபைல் உலகில் பெரிய சாதனையாக பார்க்கப்படும் செயல்படும் முறையே அசரவைக்கும் அளவிற்கு உள்ளது.
மூளையில் நாம் என்ன நினைக்கிறோமே அப்படியே இனி மொபைலை ஆபரேட் செய்யமுடியும். யாருக்கு போன் செய்வது என தொடங்கி அனைத்திற்கும் மூளையில் நாம் நினைத்தால் மட்டுமே போதும். இந்த 'மைண்ட் கண்ட்ரோல்' தொழில்நுடபத்திற்கு தற்போது மைக்ரோசாப்ட் காப்பிரைட்ஸ் கைபற்றியுள்ளது.
அதாவது, நாம் யாருக்காவது கால் செய்ய வேண்டும் என்று மொபைலை திறந்தாள் மட்டும் போதும் நினைத்த நபருக்கு போன் கால் தானாகவே செல்லும். அதேபோல் பேஸ்புக்கில் லைக் இடுவது, வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் என அனைத்தும் இதில் அடங்கும்.
இது 'எலக்ட்ரோ என்செபலோகிராம்' என்ற தொழில்நுட்பம் நம் மூளையில் ஏற்படும் மாற்றங்களை கவனமாக கருத்தில் கொள்ளும். அதை வைத்து நாம் என்ன நினைக்கிறோம் என்பதை கண்டுபிடித்து அனைத்து வேலைகளையும் வேகமாக இயக்கம் செய்யும். இப்படி வியக்கவைக்கு தொழில்நுட்பம் இன்னும் சில மாதங்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
இதற்கு மிக முக்கியமாக பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழில்நுட்ப கருவி ஒன்றை முன்னதாகவே வெளியிட இருக்கிறது. அந்த கருவிக்கு நாம் எப்படி எல்லாம் மனதில் நினைப்போம் என்று பழக்கப்படுத்தினால் போதும் அதுவே சில நாட்களில் நாம் சொல்வதை எல்லாம் கேட்டு அனைத்தையும் செய்யும்.