இனி எல்லா இடத்திலும் ப்ரீ வைஃபை தான்...!
நாடுமுழுவதும் 8500க்கு அதிகமான ரயில் நிலையங்களில்,ரூ.700 கோடி செலவில் வைபை வசதி வழங்கப்போவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
புறநகர்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் உள்ள ரயில்வே நிலையம் உட்பட நாட்டில் உள்ள மொத்த 8500க்கு அதிகமான ரயில் நிலையங்களில் ப்ரீ வைபை சேவை வழங்க திட்டமிடப்பட்ட உள்ளது.
தற்போது வரை 216 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தகட்டமாக 1200 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு வைபை சேவை வழங்க தேர்வு செய்யபட்டு உள்ளது
இந்த திட்டம் முழுமை பெரும் தருவாயில்,ரயில்வே பயணிகள் அதிக அளவில் பயன்பெறுவர் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது.