
2018 ஆங்கில புத்தாண்டை தனது அதிரடி ஆஃபர் மூலம் பாரதி ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குவதாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏர்டெல் அறிவித்து வழங்கி வரும் ரூ.799 திட்டத்தில் இனி தினமும் 3.5 ஜிபி 3ஜி/ 4ஜி டேட்டா வழங்குவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD அழைப்புகள், தினமும் 100 SMS இதில் வழங்கப்படுகிறது.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.799 திட்டம் ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.799 திட்டத்திற்கு நேரடி போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் வழங்கும் ரூ.799 திட்டம் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. முன்னதாக ஜியோ ரூ.799 திட்டம் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் அனைத்து பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
ஜியோ பொறுத்தவரை ரூ.799 திட்டததில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜிபி 4ஜி டேட்டா அளவில்லா வாய்ஸ் கால், SMS. மற்றும் அனைத்து ஜியோ ஆப்ஸ் பயன்படுத்தும் வசதி உள்ளிட்ட 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
இரு நிறுவனங்களின் திட்டங்களில் ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்குகிறது. எனினும் வாய்ஸ் கால் பொறுத்தவரை அதிகம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஜியோ சிறப்பான சேவையை வழங்குகிறது. ஏர்டெல் அளவிட்டமல் பேசிக்கொள்ளும் விதமாக வாய்ஸ் கால் வழங்குவதாக கூறினாலும், நாளுக்கு 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. இது உள்ளூர் மற்றும் வெளியூர் என அனைத்து வித அழைப்புகளும் இதில் அடக்கம். ஏர்டெல் பேமெண்ட் பேங்க் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.75 கேஷ்பேக் வழங்கப்படும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.