பஜாஜ் பல்சர் N160 மாடல் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புது பல்சர் மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல் பஜாஜ் பல்சர் N160 என அழைக்கப்படுகிறது. புதிய பல்சர் 250 பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் இரண்டாவது மாடல் இது ஆகும். பஜாஜ் பல்சர் N160 சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 23 ஆயிரம் என்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். மாடல் விலை ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தோற்றத்தில் புதிய பல்சர் N160 மாடல் பல்சர் 250 போன்றே காட்சி அளிக்கிறது. இதன் ஸ்டைலிங் மற்றும் ஹெட்லேம்ப் உள்ளிட்டவை பல்சர் 250 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் பக்கவாட்டு மற்றும் பின்புற பேனல்கள் உள்ளிட்டவைகளும் பெரிய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளது.
என்ஜின் விவரங்கள்:
புதிய பஜாஜ் பல்சர் N160 மாடலில் 164.82சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15.7 ஹெச்.பி. பவர், 14.65 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது பல்சர் NS160 மாடலை விட மிக சொற்ப அளவு குறைந்த திறன் ஆகும். சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் பல்சர் N160 மாடலில் 15 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மொத்த எடை 154 கிலோ ஆகும். இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N160 மோட்டார்சைக்கிள் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். கொண்ட மாடல் - ரேசிங் ரெட், டெக்னோ கிரே மற்றும் கிரீபின் புளூ நிறங்களில் கிடைக்கிறது. பஜாஜ் பல்சர் N160 டூயல் சேனல் ஏ.பி.எஸ். மாடல் புரூக்லின் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய பஜாஜ் பல்சர் N160 மாடல் டி.வி.எஸ். அபாச்சி RTR 1604V, ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மற்றும் சுசுகி ஜிக்சர் போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.