உலக நாடுகளில் பல, தானியங்கி கார் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவிலும் மிக விரைவில் தானியங்கி கார்களை கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளனர் இந்திய ஐஐடி மாணவர்கள்.
மகேந்திரா நிறுவனத்தின் ரைஸ் பிரைஸ் போட்டி விரைவில் நடைபெற உள்ளது .இந்த போட்டியில், இந்திய ஐஐடி நிறுவனமான, ஐஐடி கராக்பூர், ஐஐடி கான்பூர், ஐஐடி பாம்பே மற்றும் இன்னும் சில ஐஐடி மாணவர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்கு சோலார் மற்றும் தானியங்கி கார் என்ற இந்த இரண்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டது. இதில் வெற்றி பெரும் குழுக்களுக்கு தலா 1 மில்லியன் டாலர்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
தற்போது தானியங்கி கார் சோதனை மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது .இந்த போட்டியில் கலந்துக்கொள்வதற்காக ஏற்கனவே 31 குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல் .
இந்த போட்டி நடைபெற்று முடிந்த பின்னர், அடுத்தக்கட்டமாக இந்திய சாலைகளில் தானியங்கி கார் இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது .