ஜியோ நிறுவத்தை பின்னுக்கு தள்ள முயற்சிக்கும் வரிசையில் ஏர்டெல்லை தொடர்ந்து தற்போது பிஎஸ் என் எல்லும் புதிய திட்டத்தை தீட்டியுள்ளது.
முதல் முதலில் அரசு துறையை சார்ந்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்தான் ஒவ்வொரு வீட்டிலும் வரத்தொடங்கியது.
அதைதொடர்ந்து தனியார் நிறுவனங்கள் சிம் கார்டு செல்போன் முறையை ஏர்டெல், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் தொலை தொடர்பில் உள்ளே புகுந்தனர்.
அதைதொடர்ந்து ரிலையன்ஸ் அம்பானி சிம்கார்டு இல்லாத ஃபோனை அறிமுகம் செய்து வசிய படுத்தினார். ஆனாலும் அவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு ஏர்டெல் ஏர்செல் பொன்ற நிறுவனங்கள் முன்னணி வகித்து வந்தது.
ஒவ்வொரு நிறுவனமும் ஒன்றன் பின் ஒன்றாக தம்மை முன்னிலை படுத்த பல சலுகைகளை வழங்கி வந்தது.
இதையடுத்து ஜியோவின் அறிமுகம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதாவது, ஜியோவின் இலவச கால்கள் மற்றும் 4ஜி இணைய சேவை ஆகியவை மூலம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மலிவு விலை சேவை மற்றும் இலவசங்களை வழங்கி வருகின்றனர்.
இதைதொடர்ந்து தொலைத்தொடர்பு சந்தையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள ஏர்டெல், வோடாபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் ஜியோவுடன் போட்டி போட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்கி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு ஜியோ நிறுவனம் இலவச மொபைல் போன் வழங்குவதாக அறிவித்து அதற்கான முன்பதிவும் முடிந்துவிட்டது.
இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் அதன் மலிவு விலை மொபைல் போனை அறிமுகம் செய்ய திட்டுமிட்டுள்ளது.
அந்த வரிசையில் தற்போது, பி.எஸ்.என்.எல் நிறுவனமும் மலிவு விலையில் ஸ்மார்ட் போன் வழங்க முன்வந்துள்ளது.
இதற்காக உள்நாட்டில் வளர்ச்சியடைந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.