இனி" NO PASSWORD"..! பேஸ்புக்கின் அடுத்த "அசத்தல் ஆப்ஷன்"...!

 |  First Published Oct 4, 2017, 4:57 PM IST
facebook going to intorduce new technology soon



முகநூலில் முகஅங்கீகாரம் மூலம் கணக்கு பாதுகாப்பு

          சமூக வலைதளங்களின் அரசன் எனப் புகழ் பெற்ற பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவர நிறைய புதிய தொழில்நுட்பங்களை தனது பயன்பாட்டில் வெளியிட்டு  வருகின்றன. இவ்வகையில் தற்போது அந்நிறுவனம்,பேஸ்புக்கில் லாகின் செய்வதற்கு, மேலும்  எளிமைதான  திட்டத்தை மிக விரைவில் முகஅங்கீகாரம் மூலம் கணக்கு பாதுகாப்பு நடைபெற முயற்சிகள் நடக்கின்றன என அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.

Latest Videos

undefined

இது பழைய கணக்கு பாதுகாப்பு முறையைவிட மிக எளிமையாகவும் ,விரைவாகவும் இருக்கும் என  டெக்கிரன்ச் நிறுவனத்திடம் கடந்த வெள்ளியன்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது.  

 தற்போது லைவ்சேட்,பேஸ் டிடெக்க்ஷன்,டேக் என பல புதிய தொழில் நுட்பங்கள் முகநூலில் தினம் தினம் வலம் வந்தாலும் இதனால் நாம் பலரால் சுலபமாக கண்காணிக்கப்படுகிறோம்  என்ற குற்றச்சாட்டும் குவிந்த வண்ணம் உள்ளன.

பரிணாம வளர்ச்சி ,தொழில்நுட்பங்கள் ஆகியவை வளர வளர ஆபத்துக்களும் குற்றங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.யாவும் நாம் பயன்படுதும் முறையிலே உள்ளது 

click me!