அறிமுகமானது பறக்கும் டாக்சி...! போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த அதிரடி நடவடிக்கை

 |  First Published Sep 29, 2017, 3:38 PM IST
introduced new flying taxi



அறிமுகமானது பறக்கும் டாக்சி...! போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த அதிரடி நடவடிக்கை

போக்குவரத்து  நெரிசல் நாளுக்கு நாளுக்கு அதிகமாகி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு ஒரு  புதிய முயற்சியாக  பறக்கும்  டாக்சியை கொண்டு  முதல் முறையாக, துபாயில் சோதனை ஓட்டம்  தொடங்கப்பட்டுள்ளது

Tap to resize

Latest Videos

பல நாடுகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில், மோனோ ரயில், மேம்பாலங்கள் போன்ற பலக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், துபாயில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆளில்லா பறக்கும் டாக்ஸியைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. மணிக்கு சுமார் 100 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய இந்த ட்ரோன், 30 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கக்கூடியது என்பது  குறிப்பிடத்தக்கது

ஜெர்மனியைச் சேர்ந்த வோலோகாப்டர் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த பறக்கும் டாக்சியில் இருவர் பயணிக்க முடியும்.அதாவது ஒரு முறை பறக்க தொடங்கினால் அரை மணி நேரத்திற்குள்  நாம் செல்ல வேண்டிய  இடமாக, நாம் பயணம் செய்யும் இடத்தை  தேர்வு செய்ய வேண்டும்.

இந்த நடைமுறை  இந்த ஆண்டு இறுதிக்குள்  கொண்டு வர உள்ளதாகவும், பின்னர் படிப்படியாக  துபாய் முழுவதும் பறக்கும் டாக்சியை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!