2020 ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குழுவில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், உலகம் முழுவதும் 5ஜி சேவைக்கு வரும்போது இந்தியாவும் 2020 க்குள் அதனோடு இணையும் எனவும் தெரிவித்தார்.
undefined
இந்த 5 ஜி சேவை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ. 500 கோடி வைப்பு நிதியாக ஒதுக்கியுள்ளது என தெரிவித்தார்.
5 ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கும் வரும்போது நகரப்புறங்களில் நிமிடத்திற்கு 10 ஆயிரம் மெகா பைட்ஸ் அளவீடும், கிராமப்புறங்களில் 1000 மெகா பைட்ஸ் அளவீடும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் குழுவில் மூத்த மத்திய அரசு அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐஐடி பேராசிரியர்கள் இடம் பெறுவார்கள் எனவும் அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.