
ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பிறகு, இன்டர்நெட் குறித்த விழிப்புணர்வும் சரி, பயன்படுத்துபவரின் எண்ணிகையும் சரி பல மடங்கு அதிகரித்து விட்டது என்றே கூறலாம்.
அதுவும் இலவச டேட்டா என்றால், சும்மா இருப்பார்களாநம் மக்கள் உடனே அதற்கான மொபைலை வாங்கி இன்டர்நெட் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ளும் அத்தனை அம்சத்தையும் சில நாட்களிலேயே தெரிந்துக்கொண்டனர்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஜியோ மக்களிடேயே இந்த அளவிற்கு வரவேற்பு பெற்றுள்ளதை, இப்படியே சென்றால்,நாம் எப்படி வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வது என சிந்தித்த மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் தற்போது போட்டி போட்டுக்கொண்டு, பல அதிரடி ஆபர்களை அறிவித்து வருகிறது.
போஸ்ட்பெய்ட் திட்டம்
அந்தவரிசையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய சலுகையை வழங்கி தங்களது வாடிக்கையாளர்களை குஷி படுத்தியுள்ளது
ரூ.299க்கு மாதம்தோறும் 10GB வீதம் மூன்று மாதங்களுக்கு 30GB பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்துடன் தற்போது, கூடுதலாக10GB கிடைக்கும்.
இதில், அதில் ஒரு மாதத்தில் பயன்படுத்தாமல் இருக்கும் மீதமுள்ள டேட்டாவை அடுத்த மாதம் சேர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய திட்டத்தை பயன்படுத்த வேண்டுமென்றால், ஏர்டெல் இணையதளத்திற்கு சென்று பதிவு செய்தாலேபோதும், சிம்கார்ட் வீடு தேடிவருகிறது.
அதுமட்டுமில்லாமல், இந்த திட்டத்தை புதியதாக பயன்படுத்தும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் டிவி அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் கூடுதலாக 30GB கிடைக்கும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. ஏர்டெர் டிவி அப்ளிகேஷனில் இதுகுறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது என்பது கூடுதல் தகவல்
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.