
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் செலுத்திய 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற செயற்கைக்கோள் தோல்வி அடைந்தது. ராக்கெட்டின் நான்கு நிலைகளில் 3 நிலைகள் நன்கு செயல்பட்ட நிலையில் 4-வது நிலையில் வெப்ப தடுப்பு அமைப்பு சரியாக பிரியாததால் செயற்கை கோளை நிலை நிறுத்துவதில் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.
ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., விண்வெளி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஏழு செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி உள்ளது.
அதன்படி 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி- 39 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இரவு 7 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் திடீரென தொழில் நுட்ப கோளாறுகாரணமாக இத்திட்டம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கிரண்குமார், செயற்கைகோளுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெப்ப தடுப்பு அமைப்பு சரியாக பிரியாததால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைகோள் தோல்வி அடைந்ததாக கூறினார்.
ராக்கெட்டின் நான்கு நிலைகளில் 3 நிலைகள் நன்கு செயல்பட்டதாகவும், 4-வது நிலையில் வெப்ப தடுப்பு அமைப்பு சரியாக பிரியாததால் செயற்கை கோளை நிலை நிறுத்துவதிலும், தொழில் நுட்ப கோளாறு காரணமாகவும் இத்திட்டம் தோல்வி அடைந்தது என அவர் குறிப்பிட்டார்.
இதனால் திட்டமிட்ட படி 19- நிமிடத்தில் செயற்கை கோளை நிலை நிறுத்த முடியவில்லை என்று தெரிவித்த கிரண்குமார் , தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார்..
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.