இன்று விண்ணில் சீறிப்பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி 39 ராக்கெட்…

 |  First Published Aug 31, 2017, 8:28 AM IST
pslv c 39 rockert from sriharikotta



இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க உதவும்,  பி.எஸ்.எல்.வி. சி39 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி 39 ராக்கெட் இன்று  சீறிப்பாய உள்ளது. 

Latest Videos

undefined

இதற்கான 29 மணிநேர கவுண்டவுன் நேற்று பிற்பகல் ஒன்று 59 மணிக்கு தொடங்கியது. 29 மணி நேர கவுண்டவுன், இன்று  மாலை 6.59 மணிக்கு முடிவடைந்தவுடன் ராக்கெட் விண்ணில் பாயவுள்ளது. 

தற்போது இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்த ராக்கெட் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும்.

மேலும் இந்த ராக்கெட்டில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–H செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 

ஏற்கனவே, 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1–H செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 

பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோ சார்பில் 2018-ல் சந்திரயான் - 2 மற்றும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3 வரிசையில் டி-2 என்ற அதிநவீன ராக்கெட் ஆகியவை விண்ணில் செலுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

click me!