ஐபோன் 15 பயனர்களுக்கு மட்டும் அசாசின்ஸ் கிரீட் மிராஜ் வீடியோ கேம் இலவசம்! இப்பவே டவுன்லோட் பண்ணுங்க!

By SG Balan  |  First Published Jun 6, 2024, 3:29 PM IST

Assassin's Creed Mirage free download: மொபைல் கேமிங் பிரியர்கள் மத்தியில் புகழ்பெற்ற அசாசின்ஸ் கிரீட் மிராஜ் வீடியோ கேம் இப்போது இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால், ஐபோன் 15 ப்ரோ பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும்.


ஐபோன் 15 ப்ரோ கடந்த ஆண்டு வெளியிடப்பட்டபோது, ​​​​கன்சோல் மற்றும் பிசி கேம்களை நேர்த்தியுடன் இயக்க முடியும் என்பதற்காக கேமிங் பிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

இன்று மற்றொரு AAA கேம்களில் ஒன்றான அசாசின்ஸ் க்ரீட் மிராஜ் ஐபோன் 15 ப்ரோ மாடல்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. நீண்ட காலத்திற்கு முன்பே இது பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில் இருந்தே ஐபோன் பயனர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tap to resize

Latest Videos

ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்டபோன் வைத்திருக்கும் அனைவரும் இந்த அசாசின்ஸ் க்ரீட் மிராஜ் கேமை ட்வுன்லோட் செய்து விளையாடி மகிழலாம். இந்த கன்சோல் கேம் ஐபோன் 15 ப்ரோ மொபைலில் சிறப்பான கேமிங் அனுபவத்தைக் கொடுக்கும்.

இந்தியாவில் கேம் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யக் கிடைத்தாலும், வெவ்வேறு நேர மண்டலங்களைக் கொண்ட பிற நாடுகளில் கேம் இயங்குவதற்கு இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிங் மேக்கரின் இளவரசன்! சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே ரெசிடென்ட் ஈவில் வில்லேஜ், டெத் ஸ்ட்ராண்டிங் போன்ற பிரபல கேம்கள் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிடைக்கின்றன. இப்போது அசாசின்ஸ் க்ரீட் மிராஜையும் கேமிங் ரசிகர்கள் விளையாட முடியும்.

இந்த சாகச விளையாட்டைப் டவுன்லோட் செய்வதும் ஈசி தான். ஐபோன் 15 ப்ரோவில் ஆப் ஸ்டோருக்குச் சென்று, அசாசின்ஸ் க்ரீட் மிராஜ் என்று ​​தேடினால், இந்த கேம் திரையில் தோன்றும். அதை மொபைலில் டவுன்லோட் செய்து நிறுவிக்கொள்ளலாம். கேம் 14 ஜிபி அளவில் உள்ளது. இருந்தாலும் மொபைல் டேட்டாவில் கூட இதை டவுன்லோட் செய்ய முடியும்.

அசாசின்ஸ் க்ரீட் கேம் சீரிஸ் யூபிசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இந்த சாகச வீடியோ கேம் தொடரில் 2023ஆம் ஆண்டில் ரிலீஸ் ஆன கேம் தான் அசாசின்ஸ் க்ரீட் மிராஜ். பாசிம் இப்னு இஷாக்கை நாயகனாகக் கொண்ட அசாசின்ஸ் க்ரீட் மிராஜ் கேம், இஸ்லாமிய பொற்காலத்தைக் களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நத்திங் ஃபோன் (3)... சி.எம்.எஃப். ஃபோன் (1)... சஸ்பென்ஸ் வைத்து டீஸர் வெளியிட்ட நத்திங்!

click me!