
அனைத்து ரயில்களிலும் பொதுப் பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் யூடிஎஸ் செயலி மூலம் வீட்டில் இருந்தே ஓபன் டிக்கெட் வாங்கும் வசதியை இந்திய ரயில்வே வழங்குகிறது.
ரயில்களில் பொதுப் பெட்டிகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காக இந்திய ரயில்வே ஓபன் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த டிக்கெட்டுகளை பெற கவுண்டர்களில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இனி அதற்கு அவசியம் இல்லை. முன்பதிவ அல்லாத டிக்கெட் எடுக்கும் முறையில் ரயில்வே முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.
ரயிலில் பொதுப் பெட்டியில் செல்ல விரும்பும் பயணிகள் எந்த இடத்திலும் ஓபன் டிக்கெட்களை வாங்கலாம். இதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்று கவுன்ட்டர்களில் மணிக்கணக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம்.
71 லட்சம் பயனர்களை தடை செய்த வாட்ஸ்அப்! விதிமுறைகளை மீறினால் இதுதான் நடக்கும்!
ரயில்வே நிர்வாகமும் டிக்கெட் கவுன்டர்களில் அதற்காக பணியாளர்களை நியமிக்க வேண்டியது இல்லை. ஓபன் டிக்கெட்டுகளை அச்சடிப்பதைக் குறைக்கவும் இந்த வசதி உதவுகிறது. யூடிஎஸ் மொபைல் அப்ளிகேஷன் மூலம் எளிமையாக அன்ரிசர்வ்டு டிக்கெட் வாங்கலாம்.
யூடிஎஸ் மொபைல் ஆப்பில் இதுவரை இருந்த முக்கியமான நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் அதிகபட்சம் 20 கி.மீ. தூரம் வரை உள்ள பயணங்களுக்கு மட்டும்தான் யூடிஎஸ் அப்ளிகேஷன் மூலம் ஓபன் டிக்கெட் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது அந்த வரம்பு இல்லை.
முன்பதிவு அல்லாத பெட்டிகள் உள்ள எந்த ரயிலிலும், எங்கு செல்வதற்கும் யூடிஎஸ் செயலி மூலம் ஓபன் டிக்கெட் வாங்கலாம். பொதுப்பெட்டியில் செல்ல விரும்பும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் இந்திய ரயில்வே கூறியுள்ளது.
13 மத்திய அமைச்சர்கள் படுதோல்வி! பாஜகவுக்கு வசமாக ஆப்பு வைத்த மக்கள் தீர்ப்பு!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.