நத்திங் ஃபோன் (3)... சி.எம்.எஃப். ஃபோன் (1)... சஸ்பென்ஸ் வைத்து டீஸர் வெளியிட்ட நத்திங்!

By SG Balan  |  First Published Jun 5, 2024, 12:52 PM IST

நத்திங் ஃபோன் சீரிஸ் வெளிப்படையான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. டீஸரில் மேட் பூச்சுடன் முழு-கருப்பு நிற வடிவமைப்பைக் காட்டுகிறது. இது CMF ஃபோன் (1) ஆக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் புதிய வடிவமைப்பு நத்திங் ஃபோனை (3) ஆக இருக்கவமு் வாய்ப்பு உள்ளது.


Nothing நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய மொபைலை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது, அதன் சமூக ஊடக பக்கத்தின் மூலம் பெயரை வெளியிடாமல், அதைப்பற்றி பதிவிட்டு வருகிறது. இது நத்திங் ஃபோன் (3) அல்லது CMF ஃபோன் (1) ஆக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நத்திங் நிறுவனத்தால் பகிரப்பட்ட டீஸர் படம் 3, 2, 1 என்ற எண்களைக் கொண்டிருப்பது கேஜெட் பிரியர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் உள்ளது. ஆனால், சமீபத்திய பதிவுகளில் இருந்து வரவிருப்பது ஒரு ஆடியோ சாதனமாக இருக்காது என்பதைக் குறிக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் அகிஸ் தனது ட்வீட் ஒன்றில், புதிய வெளியீடு ஒரு மொபைல் போன் தான் என்பதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்கள் நத்திங் ஃபோன் (3) மற்றும் CMF ஃபோன் (1) இரண்டையும் குறிப்பிட்டு குழப்பத்தைச் ஏற்படுத்துகின்றன. இரண்டு போன்களும் ஜூலையில் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது. ஆனால் நத்திங் நிறுவனம் இரண்டுக்கும் வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிடவில்லை.

"3, 2, 1" குறிப்பு மூன்றாம் தலைமுறை நத்திங் ஃபோனாக இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது. நத்திங் ஃபோன் (2) ஜூலை 2023 இல் அறிமுகமானது. அதேபோல இந்த ஆண்டு ஜூலையில் அதன் புதிய எடிஷன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நத்திங் ஃபோன் சீரிஸ் வெளிப்படையான வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. டீஸரில் மேட் பூச்சுடன் முழு-கருப்பு நிற வடிவமைப்பைக் காட்டுகிறது. இது CMF ஃபோன் (1) ஆக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் புதிய வடிவமைப்பு நத்திங் ஃபோனை (3) ஆக இருக்கவமு் வாய்ப்பு உள்ளது. நத்திங் புதிய ஃபோன் முற்றிலும் கருப்பு நிறத் தோற்றத்தில் வந்தால், முந்தைய பிரீமியம் மாடல்களில் இருந்து வேறுபட்டதாக இருக்கும். எனவே இது CMF ஃபோன் (1) ஆகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வெளியீட்டு தேதி நெருங்கும்போது, ​​இந்தப் புதிய சாதனத்தின் அம்சங்கள் மற்றும் பிற விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, CMF ஃபோன் (1) சுமார் ரூ.20,000 விலையில் வெளியாகலாம். அதே சமயத்தில் நத்திங் ஃபோன் 3 ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும்.

click me!