ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி, இலவச ஏராப்ட்ஸ்... வருடாந்திர சலுகையை துவங்கிய ஆப்பிள்..!

By Kevin Kaarki  |  First Published Jun 25, 2022, 12:08 PM IST

இந்த சலுகையின் கீழ் ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் (ஜென் 2) மற்றும் ஆறு மாதங்களுக்கான ஆப்பிள் மியூசிக் சந்தாவை இலவசமாக வழங்குகிறது.


ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர 'Back to School' சலுகையை இந்திய பயனர்களுக்கு அறிவித்து இருக்கிறது. 'Back to School' சலுகையானது பல்வேறு நாடுகளில் 'Back to School' திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் சலுகை திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட ஐபேட், மேக்புக் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை பெற முடியும். 

இந்த சலுகையின் கீழ் ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸ் (ஜென் 2) மற்றும் ஆறு மாதங்களுக்கான ஆப்பிள் மியூசிக் சந்தாவை இலவசமாக வழங்குகிறது. இத்துடன் ஆப்பிள் கேர் பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் ஜென் 3 மாடலுக்கு அப்கிரேடு செய்யும் போது ரூ. 6 ஆயிரத்து 400 செலுத்தினால் போதும். இதே போன்று ஏர்பாட்ஸ் ப்ரோ வாங்குவோர் ரூ. 12 ஆயிரத்து 200 செலுத்த வேண்டும். 

Tap to resize

Latest Videos

undefined

ஆப்பிள் எட்யுகேஷன் விலை சலுகைகள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அவர்களின்  பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆப்பிள் 'Back to School' சலுகை ஏற்கனவே துவங்கி விட்டது. இவை செப்டம்பர் மாதம் வரை அமலில் இருக்கும்.

மேக்புக் ஏர் சீரிஸ்:

மேக்புக் ஏர் (M1) மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 முற்றிலும் இலவசம். மேக்புக் ஏர் M1 மாடல் தற்போது ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து கிடைக்கிறது. இதன் உண்மை விலை ரூ. 99 ஆயிரத்து 900 ஆகும். 

மேக்புக் ஏர் M2 மாடலை வாங்குவோர் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடலை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். மேக்புக் ஏர் M2 மாடலின் உண்மை விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 ஆகும். இதனை தற்போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும். 

மேக்புக் ப்ரோ சீரிஸ்: 

மேக்புக் ப்ரோ 13 இன்ச் மாடலுக்கும் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடல் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் மேக்புக் ப்ரோ 13 இன்ச் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 ஆகும். இதனை தற்போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடலை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேக்புக் ப்ரோ 14 இன்ச் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடல் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் மேக்புக் ப்ரோ 14 இன்ச் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 95 ஆயிரத்து 410 என துவங்குகிறது. இதனை தற்போது ரூ. 20 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 1 லட்சத்து 75 ஆயிரத்து 410-க்கு வாங்குவதோடு, ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடலையும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

மேக்புக் ப்ரோ 16 இன்ச் மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடல் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் மேக்புக் ப்ரோ 16 இன்ச் மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 39 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதனை தற்போது ரூ. 25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 2 லட்சத்து 15 ஆயிரத்து 910 விலையில் வாங்குவதோடு, ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடலையும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

ஐமேக் மற்றும் ஐபேட் சீரிஸ்:

ஐமேக் மாடலை வாங்குவோருக்கு ரூ. 12 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசமாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஐமேக் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 910 முதல் துவங்குகிறது. தற்போது இதனை ரூ. 1 லட்சத்து 07 ஆயிரத்து 910 விலையில் வாங்கிக் கொள்வதோடு ரூ. 14 ஆயிரம் மதிப்புள்ள ஏர்பாட்ஸ் ஜென் 2 மாடலையும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். 

இதேபோன்று ஐபேட் ஏர் மாடலுக்கு ரூ. 4 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசமாக வழங்கப்படுகிறது. ஐபேட் ஏர் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 54 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இத்துடன் ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசமாக கிடைக்கும். ஐபேட் ப்ரோ மாடலுக்கு ரூ. 3 ஆயிரத்து 600 தள்ளுபடி மற்றும் ஏர்பாட்ஸ் ஜென் 2 இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் விலை இந்திய சந்தையில் ரூ. 71 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

click me!