ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் ஐபோன் 13 போன்ற ஸ்மார்ட்போன் அறிமுகம்...!

By Kevin Kaarki  |  First Published Jun 25, 2022, 11:24 AM IST

இந்த ஸ்மார்ட்போனில் சதுரங்க வடிவிலான டிசைன் மற்றும் செல்பி கேமரா சென்சார்களுக்காக நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.


ஜியோனி நிறுவனம் சீனாவில் அறிமுகம் செய்து இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஐபோன் 13 மற்றும் ஹூவாய் P50 ப்ரோ போன்றே காட்சி அளிக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஜியோனி P50 ப்ரோ என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சதுரங்க டிசைன் மற்றும் செல்பி கேமரா சென்சார்களுக்காக நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் ஐந்து கேமரா சென்சார்கள் தோற்றத்தில் ஹூவாய் நிறுவனத்தின் P50 ப்ரோ போன்றே காட்சி அளிக்கிறது. 

ஐந்து கேமரா சென்சார்களும் இரண்டு வட்ட வடிவம் கொண்ட மாட்யுல்களில் வைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகளில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் செங்குத்தான பெசல்கள், பிரத்யேக கிரேடியண்ட் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

undefined

சிறப்பம்சங்களை பொருத்தவரை 6.517 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 128GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 4ஜி எல்.டி.இ., 6GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஜியோனி P50 ப்ரோ அம்சங்கள்:

- 6.51 இன்ச் FHD+ டிஸ்ப்ளே
- 6GB ரேம்
- 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- 13MP பிரைமரி கேமரா
- நான்கு கேமரா லென்ஸ்கள், எல்.இ.டி. பிளாஷ்
-5MP செல்பி கேமரா
- 4ஜி எல்.டி.இ., ஓ.டி.ஜி., வைபை, ப்ளூடூத்
- யு.எஸ்.பி. டைப் சி
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்

விலை விவரங்கள்: 

ஜியோனி P50 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை RMB 659, இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 600, 4GB ரேம், 128GB மெமரி மாடல் விலை RMB739 இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 600, 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை RMB 759 இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 800 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ஜியோனி P50 ப்ரோ ஸ்மார்ட்போன் பிரைட் பிளாக், க்ரிஸ்டல் மற்றும் டார்க் புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

click me!