அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி M52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின் கடந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் சாம்சங் கேலக்ஸி M52 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் தழள்ளுபடி வழங்கப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு மற்றொரு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி M52 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என மாறி உள்ளது. இந்த சலுகை ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் அறிவிக்கப்பட்டு உள்ளது. சாம்சங் கேலக்ஸி M52 5ஜி இவ்வளவு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி M52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் சாம்சங் கேலக்ஸி M52 5ஜி ஸ்மார்ட்போனை ரூ. 20 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இந்த விலை சாம்சங் கேலக்ஸி M52 5ஜி 6GB ரேம், 128GB மெமரி மாடலுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M52 5ஜி ஸல்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் வைட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி M52 5ஜி அம்சங்கள்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M52 5ஜி ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் FHD+ LCD பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G பிராசஸர், 5000mAh பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6GB ரேம், 128GB மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.