ஆப்பிள் மியூசிக் சேவையில் வழங்கப்பட்டு வந்த மூன்று மாத டிரையல் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையின் டிரையல் திட்டத்தை மாற்றியமைத்து இருக்கிறது. அதன்படி ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மூன்று மாத டிரையல் ஒரு மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் மியூசிக் சேவை வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து பகுதிகளிலும் இது அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதே தகவல் அந்நிறுவனத்தின் இந்திய வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் ஆப்பிள் மியூசிக் சேவைக்கான சந்தா ஒரு மாதத்திற்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் ஆப்பிள் மியூசிக் ஒரு மாதத்திற்கான சந்தா ரூ. 99 ஆகும்.
undefined
ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ், ஹோம்பாட் மினி மற்றும் தேர்வு செய்யப்பட்ட பீட்ஸ் சாதனங்களை வாங்கும் போது ஆப்பிள் மியூசிக் சந்தா ஆறு மாதத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. டிரையல் வேலிடிட்டி குறைக்கப்பட்டு இருப்பதை ஆப்பிள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
2015-இல் அறிமுகமானது முதல் டிரையல் வேலிடிட்டியில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ஏற்கனவே மூன்று மாதங்களுக்கான இலவச டிரையல் பயன்படுத்துவோர், மூன்று மாத வேலிடிட்டி முடியும் வரை ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்தலாம். அந்த வகையில், புதிதாக ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் மட்டுமே இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.