இந்தியாவில் இருந்து ஒரே மாதத்தில் $1 பில்லியன் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்த முதல் நிறுவனம் என்ற வரலாற்றை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட குபெர்டினோ நிறுவனமானது கடந்தாண்டு அதாவது 2022 டிசம்பர் மாதத்தில் ரூ. 8100 கோடி மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்துள்ளது, இதனால் ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த தொழில்துறை ஏற்றுமதியை ரூ.10,000 கோடியாக உயர்த்தியுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து மொபைல் போன்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிள் மற்றும் சாம்சங் முன்னணி நிறுவனங்களாக உள்ளன. இருப்பினும், அரசாங்கத் தரவுகளின்படி, ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்தை தற்போது முந்தியுள்ளது. ஃபாக்ஸ்கான் ஹான் ஹாய், பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான் ஆகிய மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலம் இந்தியாவில் இருந்து ஐபோன் 12, 13, 14 மற்றும் 14+ உள்ளிட்ட பல ஐபோன் மாடல்களை ஆப்பிள் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.
undefined
இந்த உற்பத்தி ஆலைகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ளன. மேலும், ஏப்ரல் 2020 இல் தொடங்கப்பட்ட இந்திய அரசாங்கத்தின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தில் பங்கேற்பாளர்களாகவும் உள்ளன.
பிஎல்ஐ திட்டம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, உற்பத்தியாளர்கள், உற்பத்தி, ஏற்றுமதி, முதலீடுகள் மற்றும் வேலைகள் பற்றிய தரவுகளை அரசாங்கத்திடம் தொடர்ந்து சமர்ப்பிக்க வேண்டும்.
மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்களைத் தவிர, பிற சிறு குறு நிறுவனங்களும் ஐபோன்களை ஏற்றுமதி செய்து வருகின்றனர். அரசாங்க மதிப்பீட்டின்படி, 2022-23 நிதியாண்டில் (FY23) 9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மொபைல் போன்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது, இது FY22 இல் 5.8 பில்லியன் டாலர்களாக இருந்தது.
சமூக ஊடகங்களில் இருக்கும் பிரபலங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்! புதிய வழிமுறைகள் அறிவிப்பு!
ஸ்மார்ட்போன் ஏற்றுமதி மட்டுமல்ல, எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியும் FY23 இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. வர்த்தகத் துறையின் கூற்றுப்படி, ஏப்ரல் மற்றும் டிசம்பர் 2022 க்கு இடைப்பட்ட காலத்தில் மின்னணுப் பொருட்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 16.67 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டின் டிசம்பர் மாதத்தை விட 51.56% அதிகமாகும். கூடுதலாக, ஏப்ரல் மற்றும் நவம்பர் 2022 க்கு இடையில் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.