
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்த 2023 புத்தாண்டில் பெரிதாக ஆஃபர் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொல்லும் அளவிற்கு புதிய ஆஃபர் ஏதுமின்றி, வெறுமனே ரூ.2023 திட்டங்களை மட்டும் அறிவித்தது. அதன்பிறகு இப்போது இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களின் விலை ரூ.899 மற்றும் ரூ.349 ஆகும்.
இந்த இரண்டு ஜியோ திட்டங்களும் MyJio ஆப், ஜியோ இணையதளம் மற்றும் பிற குறிப்பிடத்தக்க தளங்களில் கிடைக்கின்றன. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ திட்டங்கள் 90 நாட்கள் வரை செல்லுபடியாகும், அன்லிமிடேட் கால்கள், 2.5 ஜிபி தினசரி டேட்டா ஆகியவை இதில் கிடைக்கின்றன.
ஜியோவின் இந்த புதிய பிளானில் கிடைக்கும் பலன்களை விரிவாக இனி பார்ப்போம்:
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 திட்டமானது தினசரி 2.5ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடேட் வாய்ஸ் கால் கிடைக்கிறது. இவை அனைத்தும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது, இந்த திட்டம் செல்லுபடியாகும் காலத்திற்கு மொத்தம் 75 ஜிபி அளவிலான டேட்டா வழங்குகிறது. மேலும், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவை வழங்கப்படுகிறது. வெல்கம் ஆஃபரின் ஒரு பகுதியாக 5ஜி டேட்டாவை வழங்குகிறது.
இப்போது, ரூ.899 மதிப்புள்ள புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது திட்டத்திற்கு வருவோம். இந்த திட்டத்தில் அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதன் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டம் 225 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவையும் கிடைக்கின்றன. ரூ.349 திட்டத்தைப் போலவே, இதிலும் வெல்கம் ஆஃபரின் ஒரு பகுதியாக 5ஜி டேட்டாவை வழங்குகிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே தனது ஜியோ 5ஜி சேவையை நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் 5ஜி சேவை இந்தியா முழுவதும் வந்து சேரும் என்று கூறியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.